கொரானா உயிர்களை மட்டும் கொல்லவில்லை.
மத நம்பிக்கை களையும் தகர்த்து வருகிறது.
கை குலுக்குவதை கைவிட்டு உலகமே இன்று கைகூப்பி வணக்கம் சொல்கிறது.
உடனே இந்து மதவாதிகள் புளகாங்கிதம் அடைகிறார்கள்.
ஆனால் உண்மை நிலவரம் என்ன?
இந்து கோவில்களுக்கு கூட்டமாக வர வேண்டாம் என்கிறார்கள். திருவிழாக்கள் ரத்து செய்யப் படுகின்றன. திருப்பதிக்கு கூட்டம் குறைந்து விட்டது.
குவைத் கூட்டமாக நமாஸ் செய்வதை தடை செய்திருக்கிறது. மசூதிகளில் கூட்டமாக கூடுவதை தவிர்க்கிறார்கள்.
சர்ச்சுகளில் கூட்டம் குறைகிறது.
மொத்தத்தில் கொரானா பாதிப்பில் இருந்து தப்பிக்க கடவுள் நம்பிக்கை போதாது என்ற மனநிலைக்கு மக்கள் வந்து விட்டார்கள். எல்லா மதங்களுக்கும் இது பொருந்தும்.
பாவம் கொரானா ! கடவுள் நம்பிக்கையில் பார பட்சம் பார்க்காமல் எல்லாரையும் காவு கொள்கிறது.
கொரானாவை எந்த கடவுள் அனுப்பினார் என்பதில் மட்டும் போட்டி இல்லை.
மதசார்பின்மையை கொள்கையாக கொண்டிருக்கும் கொரானாவை கட்டுப்படுத்தி ஒழிப்பதில் மட்டும் எல்லா மதங்களும் ஒன்று பட்டிருக்கின்றன.
ஒழிக கொரானா ?!