கோயில்கள், மசூதிகள், சர்ச்சுகள் மூடல் எதைக்காட்டுகிறது?

religion
religion

மனிதன் தன்னைக் காத்துக் கொள்ள கடவுள்களை முட்டும் நம்பவில்லை என்பதைத்தான் கோவில்கள், மசூதிகள், சர்ச்சுகள் மூடல் காட்டுகின்றன.

மசூதிகளில் வெள்ளிக்கிழமை தொழுகைக்கு கூடிய கூட்டத்தை போலீஸ் தடியால் அடித்து வெளியேற்றினார்கள்.

மசூதிகளின் பணியாளர்களே தொழுகை கடமையை நிறைவேற்றினார்கள் . அதை அந்தந்த மசூதிகளின் இமாம்களே அறிவித்தார்கள். அகில இந்தியாவிலும் இதே நிலைதான்.

கோவில்களில் எந்த பக்தரும் அனுமதிக்கப் படவில்லை. கோவில்  பணியாளர்களே அன்றாட பூசைகளை செய்தார்கள். பெரிய பெரிய கோவில்கள் எல்லாம் பூட்டப்பட்டிருக்கின்றன. சர்ச்சுகளில்  ஆராதிக்க கூட்டம் கூடவில்லை. தானாகவே தவிர்த்து விட்டார்கள். எங்கே போயிற்று மத நம்பிக்கையும் உரிமையும்?

பழனி பங்குனி உத்திர பெருவிழா ரத்து செய்யப்பட்டிருக்கிறது.

போப் ஆண்டவர் வசிக்கும் இத்தாலியில்தான் அதிக உயிரிழப்பு !

எல்லாம் கொரானாவின் மகிமை.

உயிரச்சம். பிழைக்க வேண்டுமென்றால் விஜ்ஞானம் சொல்வதை கேட்க வேண்டும் .நான் நம்பிக்கை உள்ளவன். எனவே நான் எனது வழிபாட்டு உரிமையை  நிலைநாட்டுவேன் என்று யாரும் குரல் கொடுக்க தயாராக இல்லை. இருந்தாலும் அரசுகள்  அதை அனுமதிக்க தயாராக இல்லை. உனது தனிப்பட்ட நம்பிக்கைக்காக சமுதாய நன்மையை கேள்விக்குறியாக்க   அரசுகள் தயாராக இல்லை.

தொற்றுநோய் வந்துதான் மத நம்பிக்கைகளை ஒதுக்கி வைக்க வேண்டுமா?

இதெல்லாம் விதிவிலக்குகள் . இதனால் எல்லாம் மனிதர்கள் இறை நம்பிக்கை இழந்து விட்டதாக எவரும் எண்ணவில்லை.

ஏன் சாதாரண காலத்தில் இந்த பட்டறிவு மனிதர்களுக்கு ஏற்படுவதில்லை என்ற ஏக்கம்தான் ஏற்படுகிறது.

தற்காலிகமாக வாவது மதங்களின் தாக்கம் குறைந்தது மகிழ்ச்சியே ?

நோயின் தாக்கம் குறைந்ததும் மீண்டும் தாண்டவமாடும் மத வெறிக்கூட்டம் .

மதங்களை மாய்த்தால் அன்றி மனிதகுலம் மேம்பட வழியே இல்லை.

அதற்கு அந்த இறைவன்தான் வழி காட்ட வேண்டும்.