மே மாதம் மூன்றாம் தேதி வரை ஊரடங்கு சட்டம் நீட்டிக்கப் பட்டிருக்கிறது.
ரமளான் நோன்பு வரும் 25 ம் தேதி துவங்குகிறது. நோன்பாளிகள் நோன்பு காலம் முடிந்து பள்ளிவாசலில் தொழுகையை நடத்தி நிறைவு செய்வார்கள்.
ஆனால் ஊரடங்கு தடை காலத்தில் எல்லா மதவழிபாட்டு தலங்களும் மூடப் பட்டிருக்கும்.
எனவே முஸ்லீம்கள் வரலாற்றில் முதன் முறையாக தங்கள் தொழுகையை பள்ளி வாசலில் நிறைவு செய்ய இயலாமல் ரமளான் நோன்பை இருக்க வேண்டி வரும்.
பாகிஸ்தானில் பல இஸ்லாமிய அமைப்புகள் ரமளான் மாதத்தில் பள்ளி வாசல்களை மூடக் கூடாது என்று வற்புறுத்தி வருகின்றன.
ஆனால் அரசு அதற்கு செவி சாய்க்கும் வாய்ப்பு மிகவும் குறைவு.
இத்தனைக்கும் சவுதி அரபியா உட்பட பல இஸ்லாமிய நாடுகள் பள்ளி வாசல்களை மூடிவிட்டன. நோய் தடுப்புக்கும் இறை வழிபாட்டுக்கும் முரண் இருப்பதாக அவர்கள் கருத வில்லை.
இதுவரை இந்தியாவில் அத்தகைய குரல்கள் எதுவும் எழவில்லை.
அதே சமயம் இஸ்லாமிய சமூகம் ரமளான் நோன்பை நோற்பதற்கும் நிறைவு செய்யும்போது தங்கள் இல்லத்திலேயே தொழுகை நடத்திக் கொள்வதற்கும் தயாராகவே இருக்கும்.
ரமளான் நோன்பை ஊரடங்கு சட்டம் எந்த வகையிலும் பாதிக்காது என்பதுதான் உண்மை.