மணிப்பூர், அருணாச்சல் பிரதேசம் , அஸ்ஸாம் மாநிலங்களில் பெரும்பாலான நாகர்கள் வசிக்கும் பகுதிகளை இணைத்து நாகர்களுக்கு தனி நாடு கேட்கும் பிரிவினைவாத இயக்கங்கள் இந்தியா ராணுவத்துடன் தொடர்ந்து சண்டையிட்டு வந்தன.
நாகா தேசிய சோஷியலிஸ்ட் கவுன்சில் அமைப்பின் இசாக் மூய்வா தனிப்பெரும் தலைவர். அவருடன் மத்திய அரசு ஒரு ஒப்பந்தம் செய்த கொண்டிருப்பது மிகப் பெரிய மாற்றம் என்றுதான் சொல்ல வேண்டும்.
ஆனால் மியன்மாரில் மறைந்து வாழும் கப்லாங் குழு இன்னமும் அச்சுறுத்தலாகவே நீடிக்கும்.
ஒப்பந்தத்தின் விபரங்களை மத்திய அரசு வெளியிடாதது பல சந்தேகங்களை உருவாக்கும் .
வடகிழக்கு மாநில முதல்வர்களை கலந்து ஆலோசிக்காமல் இந்த ஒப்பந்தம் உருவானது ஏற்கத்தக்கதல்ல என்று சோனியா காந்தி கூறியிருப்பது பொறுப்பற்ற செயலாகவே தோன்றுகிறது.
அமைதியை மோடி அரசு கொண்டு வந்து விட்டதே என்ற ஆதங்கம் இருந்தால் அதை இப்படி வெளிப்படுத்தி தனது பலவீனத்தை வெளிப்படுத்தி இருக்க வேண்டாம். .
எதில்தான் அரசியல் செய்வது என்று ஒரு வரை முறை கிடையாதா???
—
வி.வைத்தியலிங்கம் (Vaithiyalingam.V)