தமிழர்கள் உணர்வு மிக்கவர்கள்! ஆனால் உணர்வு மிகுதியால் அறிவைப் பின்னுக்குத் தள்ளுவதுதான் அச்சத்தை ஏற்படுத்துகிறது. . .
நாடே திரண்டு அப்துல் கலாமிற்கு அஞ்சலி செலுத்தியது சுப்ரமணியின் மனதை வருத்தியது. திருவாரூரை சேர்ந்த போரூரில் வேலை செய்து வந்த அந்த 27 தானும் ஏதாவது செய்ய வேண்டும் என்று இருந்த உயிரை விட்டுவிட்டான். அவன் குடும்பம்தான் பரிதவிக்கும். நாமும் ஏங்குகிறோம்?
இந்தப் போக்கு சரியா? இதை எப்படி தடுத்து நிறுத்துவது?
யார் சிறைக்குப் போனாலும் , யார் இறந்தாலும் , யார் கைது செய்யப் பட்டாலும் கூடவே இறப்பது தமிழன் தலை விதியா?
முத்துக்குமார் உயிராயுதம் ஏந்தியதில் ஒரு நியாயம் இருந்தது. சக உதிரங்கள் ஈழத்தில் இனப்படுகொலை செய்யப் பட்ட நிலையில் அது கையறு நிலையின் வெளிப்பாடு. இருபதுக்கும் மேற்பட்டவர்கள் தொடர்ந்தார்கள். வரலாற்றில் இடம் பெற்றார்கள்.
ஒப்பிடமுடியாத சூழல் அது .
இந்த அவலம் தடுத்து நிறுத்தப் பட்டே ஆக வேண்டும். .
நாளையே யாரும் கைது செய்யப் பட்டால் சிறை வைக்கப் பட்டால் , மரணம் அடைந்தால் இந்த இழப்பும் அவலமும் அவமானமும் தொடரக் கூடாதே !!!!