சசிபெருமாள் மரணம் தமிழக அரசு நடத்திய அலட்சியக் கொலை? காரணமானவர்கள் தண்டிக்கப் பட வேண்டும்! மதுவிலக்கு அமல் திட்டத்தை அரசு அறிவிக்க வேண்டும் !!!!!

                     தமிழ்நாடு பெயர் மாற்றத்திற்கே உண்ணாவிரதம் இருந்து உயிர் விட்டார் சங்கரலிங்க நாடார்.  மதுவிலக்கும் அவரது போராட்டத்தின் ஒரு பகுதி. 
                     30.05.2014 லேயே  , பள்ளி  கல்லூரி அருகில் டாஸ்மாக் கடை இருப்பதை அகற்ற மதுரை உயர்நீதி  மன்றம் உத்தரவிட்டும் , அரசு அதிகாரிகள் அகற்ற மறுத்தது ஏன்?        உண்ணாவிரதம் இருந்தும் பயனில்லாமால்தான் தீக்குளிக்கும் போராட்டத்தை அறிவித்துள்ளார்கள்..   இவரும் பா ஜ க நிர்வாகி ஜெயசீலன் என்பவரும் செல் போன் டவரில் ஏறி போராட்டம் நடத்தி இருக்கிறார்கள். 
                   காவல் துறை இருந்தும் அவர்களை ஐந்து மணி நேரம் போராட்டம் நடத்த விட்டு வேடிக்கை பார்த்ததன விளைவு சசிபெருமாள் ரத்த வாந்தி  எடுத்து இறந்திருக்கிறார். 
                     இரண்டு குற்றம் நடந்திருக்கிறது.   ஒன்று நீதிமன்றம் கடையை அகற்ற உத்தரவிட்டும் நடைமுறைப்படுத்தாத குற்றம்.   அதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப் பட வேண்டும். நீதிமன்றமே தானாக முன் வந்து இந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். 
                 இரண்டாவது அவர் சாகும் வரை போராடும் அளவுக்கு தூண்டியது. அது தற்கொலை என்று கூட சொல்வார்கள்.    அதற்கு தூண்டியவர்கள் மீது என்ன நடவடிக்கை .? அதுவும் தண்டிக்கப்பட வேண்டிய குற்றமே!!!
              கலைஞர் மதுவிலக்கை அமுல்படுத்துவோம் என்று அறிவித்த  பிறகு தமிழகத்தில் ஒரு கருத்தொற்றுமை ஏற்பட்டுள்ளது.    யாரும் மதுவுக்கு  ஆதரவாக பேசி இனி மக்களிடம் வாக்கு வாங்கி வெற்றி பெற முடியாது என்ற நிலை  உருவாகிவிட்டது.
                 உடனே மதுவிலக்கை அறிவித்து , செய்த குற்றங்களுக்கு இப்போதாவது தமிழக அரசு பிராயச்சித்தம் செய்து கொள்ளட்டும்.  
  comments may also  be addressed to; vaithiyalingamv@gmail.com