1500 கோடி வாங்கிக் கொண்டு தி மு க அணியில் விஜயகாந்த் மற்றும் கம்யூனிஸ்டுகள் சேராமல் பார்த்துக் கொண்டாரா வைகோ??? குற்றச்சாட்டிற்கு பதில் கூறாமல் ஒளிந்தது ஏன்?

பாலிமர் டி வி நிகழ்ச்சியில் ம தி மு க அலுவலகத்திலேயே பேட்டி கொடுத்துக்கொண்டு இருந்த வைகோ திடீரென்று எழுந்து வெளிநடப்பு செய்தார்.   காரணம் நெறியாளர் கேட்ட ஒரு கேள்வி.

 நீங்கள் 1500  கோடி வாங்கிக்கொண்டு தி மு க பக்கம் விஜயகாந்த் மற்றும் இரண்டு கம்யூனிஸ்டுகளும் சேரவிடாமல் செய்ததாக குற்றம் சாட்டப் படுகிறதே உங்கள் பதில் என்ன  என்பதுதான் அந்தக் கேள்வி.
இதற்கு முன்பு விஜயகாந்துக்கு 500 கோடியும் 80  சீட்டும் தர தி மு க தயாராக இருந்தது என்று குற்றம் சாட்டி இருந்தார்  வைகோ.       அதற்கு  பேச்சு வார்த்தையே நடக்க வில்லை என பிரேமலதா பதில் சொல்லி விட்டார்.
மற்றவர் மீது குற்றம் சொல்ல தயங்காத வைகோ தன் மீது சுமத்தப் படும் குற்றச்சாட்டிற்கு பதில் சொல்ல மறுப்பது ஏன்?
                         உண்மை எங்கோ உறங்குகிறது!!!!