நீதிபதிகள் நியமனத்தில் இந்தியில் கையெழுத்திட வேண்டும் என்பது நிபந்தனையா மரபா? இந்த அடிமைத்தன மரபு நீக்கப் பட போராடுவோம்???!!!

சமீபத்தில் சென்னை உயர்நீதி மன்றத்துக்கு ஆறு நீதிபதிகளை நியமிக்க இருப்பதாக செய்தி வெளியானது.

குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்த பிறகு நியமன உத்தரவு ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் தயாரிக்கப் படும். இதில் சம்பத்தப் பட்ட நீதிபதி தன் பெயரை இந்தி மொழியில் கையொப்பம் இட்டு குடியரசு தலைவர் அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும். அதன் பின்னர் அவரை நீதிபதியாக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பிப்பார் .   இந்த நடவடிக்கை நீதித்துறையின் மரபாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறதாம்.
முடிவு கட்டப் பட வேண்டிய மரபு இது.
அப்படி வந்த உத்தரவில் நேற்று புதிய நீதிபதிகள் ஆறு பேரும் தங்களது பெயர்களை இந்தியில் எழுதினார்களாம்.
அவர்களுக்கு ஆட்சேபணை இல்லை என்னும்போது மற்றவர்களுக்கு என்ன ஆட்சேபணை என்ற கேள்வி எழுகிறது.
அவர்களுக்கு இந்தி தெரியுமா?   தெரிந்து கையெழுத்து இட்டார்களா?     இந்தி தெரியாமல் இருந்தாலும் எழுதி கொடுத்த படி கையெழுத்திட்டார்களா?
தெரிந்த ஆங்கிலத்தில் கையெழுத்து இட முடியாமல் போனது ஏன்?
அயல் நாட்டு மொழி  ஆங்கிலம் என்றால் அது நீதிமன்ற மொழியாக ஆட்சி மொழியாக  நீடிப்பது ஏன் ?
ஏன்  தமிழில் கையெழுத்து வாங்க கூடாது.?
மாற்றப் பட வேண்டிய மரபு இந்தியில் கையெழுத்து என்பதில் சந்தேகம் இல்லை!!!!!
பாராளுமன்றத்திலும் உச்ச நீதி மன்றத்திலும் தமிழ் உள்பட அனைத்து மொழிகளும் இடம் பெற்றால் தான் இது ஒரு நாடு என்று பொருள் படும்.