வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் உடன் ஏற்பட்ட தொடர்பால் அவரது ஆணைக்கிணங்க தன்னை மறைந்த நெல் ரகங்களை மீட்டெடுக்கும் வேலைகளிலும் இயற்கை விவசாய பண்ணைகளை அமைக்கும் பணிகளிலும் ஈடுபடுத்திக் கொண்டு 174 நெல் ரகங்களை மீட்டு எடுத்ததுடன் 2006 லிருந்து ஆண்டுதோறும் நெல் திருவிழாக்களை தொடர்ந்து நடத்தி சாதனை படைத்து திடீர் மரணம் எய்திய நெல் ஜெயராமன் விவசாயிகள் மனதில் என்றும் நிலைத்திருப்பார்.
குறிப்பாக நெல் நெல் திருவிழாவிற்கு வரும் விவசாயிகளுக்கு ஒரு கிலோ மீட்டெடுத்த விதைகளை கொடுத்து அடுத்த ஆண்டு வரும்போது இரண்டு கிலோவாக திருப்பி கொடுக்கும் முறையை ஏற்படுத்தி நெல் ரகங்கள் மறையாவண்ணம் திட்டம் ஏற்படுத்தியவர்.
குறிப்பாக மாப்பிளை சம்பா , யானைகவுனி, கருப்பு கவுனி, சீரக சம்பா, தூயமல்லி, குள்ளக்கார் , கிச்சடி சம்பா, உள்ளிட்ட ரகங்கள், தம்பதிகள் இல்லறம் நடத்த, குழந்தை நன்றாக வளர, சுக பிரசவம் பெற , தாய் பால் சுரக்க, சர்க்கரை நோய்க்கு மட்டுமல்லாமல் ஆஸ்துமா, சளி, இருமல் போன்ற நோய்கள் குணமாக என்று பலவிதமான உடல் நலம் காக்கும் தன்மை வாய்ந்தவை என்பது நாம் தலை முறை தலைமுறையாக பேணி பாது காக்க வேண்டிய பணியாகும்.
இத்தகைய பணிகள் தொடர்ந்து நடைபெற அரசு திட்டமிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஏனென்றால் தனி மனிதர் பணிகள் ஏற்படுத்தும் பலன்கள் பரவலாக எல்லாரையும் சென்றடைய முடியாது. அது அரசால் தான் முடியும். அரசில் அத்தகைய நோக்கம் கொண்டோர் அமர வேண்டும்.