இந்தியன் வங்கி ஏ டி எம் களில் இனி 2000 ரூபாய் நோட்டுகள் வராது என்று அறிவித்ததும் பரவலாகவே இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் கண்ணில் படுவது இல்லை.
ஜி எஸ் டி கொண்டுவந்தது தான் மோடி அரசு செய்த மிகப் பெரிய பிழை என்று அந்தக் கட்சியீன் சுப்ரமணியசாமி அடிக்கடி சொல்லி வருகிறார்.
பண மதிப்பிழப்பு என்பது ஒரு திட்டமிட்ட கொள்ளை organised loot என்றார் மன்மோகன் சிங்.
ஏறத்தாழ அது நிரூபணமாகி விட்டது.
ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை கருப்பு பணமாக பதுக்குகிறார்கள் என்ற குற்றச்சாட்டு சொல்லப் பட்ட நிலையில் இப்போது அந்த பதுக்கல் இரண்டாயிரம் நோட்டுக்களாகி விட்டது.
இதற்கு என்ன மாற்று வைத்திருக்கிறார் மோடி?
ஏன் நோட்டுக்கள் ? டிஜிட்டலுக்கு மாறுங்கள் என்று உபதேசம் செய்வாரோ?
This website uses cookies.