மோடி அரசு எல்லா மாநிலங்களில் இருந்தும் எல்லவற்றையும் டெல்லிக்கு கொண்டு செல்லும் திட்டங்களை முன்னெடுத்துள்ளது என்ற ஐயம் வலுப்பெற்றுள்ளது .
இந்நிலையில் சென்னையில் இயங்கி வரும் சங்கேத வாத்யாலாவை டெல்லிக்கு மாற்ற இருப்பதாக தகவல் கிடைத்து தென்னிந்திய கைவினை பொருட்கள் தொழில் சங்கத்தின் தலைவர் பி சுப்பிரமணியன் மத்திய கைவினை பொருட்கள் வளர்ச்சி ஆணையருக்கு அனுப்பி உள்ள மனுவில் தங்களது ஆட்சேபனைகளை தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய நாடுகளின் சுற்றுலா வழிகாட்டி கையேட்டில் சென்னையில் பார்க்க வேண்டிய முக்கிய சுற்றுலா தலமாக இந்த கண்காட்சி கூடம் இடம் பெற்றுள்ளது.
தமிழக அரசு இது பற்றி எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. அகில இந்திய அளவில் எல்லா மாநிலங்களிலும் உள்ள முக்கிய அலுவலங்களை டெல்லிக்கு மாற்றுவதை ஒரு கொள்கையாக கொண்டிருக்கிறதா பாஜக அரசு?
தமிழக அரசு விளக்கம் தர வேண்டும்.
குறைந்தபட்சம் பிரச்னை எழுப்பினால்தான் இந்த தவறான முயற்சிகளை கைவிடுவர்.
This website uses cookies.