கெட்டுப் போன இறைச்சி ஜோத்பூரில் இருந்து சென்னைக்கு வருகிறது என தகவல் வந்ததை அடுத்து ரயில்வே வாரியம் சார்பில் விசாரனை முடுக்கிவிடப்பட்டது .
மீன் இறைச்சி என ஏற்றுமிடத்தில் பதிந்திருக்க பறிமுதல் செய்யப்பட்டு ஆராய்ந்த போது அது வால் நீண்டிருந்ததால் அது நாய்க்கறி என அதிர்ச்சியாக தகவல் பரவி பத்திரிகைகளில் செய்திகள் பரபரப்பாக வெளியாயின.
எல்லாரும் மீம்ஸ் தடபுடலாக வேடிக்கை காட்ட ரண களமானது இறைச்சி சாப்பிடுவோர் கூட்டம்.
அனுப்பியவர் சென்று சேர வேண்டிய முகவரிகள் தெளிவாக இல்லை என்பதால் ரெயில்வே பாதுகாப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு இறைச்சி பெறுவதாக இருந்த முகவர் ஜெய்சங்கர் என்பவர் கைது செய்யப் பட்டார்.
ஆனால் அவர்கள் தொடக்கம் தொட்டே நாங்கள் ஆட்டு இறைச்சிக்குத் தான் ஆர்டர் கொடுத்திருந்தோம் என்று சொல்லிக் கொண்டே இருந்தார்கள்.
இறைச்சி சென்னை எழும்பூர் கால்நடை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பப் பட்டு ஆய்வுக்கூடத்தில் பரிசோதிக்கப் பட்டது.
இன்று வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையில் பறிமுதல் செய்யப் பட்ட இறைச்சி ஆட்டு இறைசியே என்றும் நாய் இறைச்சியல்ல என்றும் தெளிவு படுத்தப் பட்டிருக்கிறது.
இதுவறை மட்டன் பிரியாணி சாப்பிட்டவர்கள் நிம்மதி அடைந்திருக்கலாம். ஆனால் இறைச்சியை அனுப்பிய பார்சல் அதிகாரிகள் ஜோத்புரில் என்ன செய்து கொண்டிருந்தார்கள்?
அவர்களால் தான் இத்தனை களேபரங்கள் !
இனிமேல் ஆவது இதுபோன்ற செய்திகளை வெளியிடும்போது மக்களின் உணர்வுகள் பாதிக்கப் படும் என்பதால் உண்மையை உறுதி செய்து கொண்டு வெளியிடுவது நல்லது.
ராஜஸ்தானின் செம்மறி வகை ஆடுகளுக்கு நீண்ட வால் இருக்கும் என்பதுதான் இத்தனை சந்தேகங்களுக்கும் அடிப்படையாக இருந்திருக்கிறது.
ரெயில்வே காவல்துறை விழித்துக் கொள்ளட்டும்.