திறந்த வெளி சிறையை ஆக்ரமித்த சாஸ்த்ரா பல்கலை கழகம்? மௌனம் காக்கும் அரசு?

SASTRA-University-Thanjavur
SASTRA-University-Thanjavur

தஞ்சாவூர் மாவட்டம் திருமலைசமுத்திரம் கிராமத்தில் உள்ளது சாஸ்த்ரா பல்கலைக்கழகம்.

தாளாளர்  ஆர்எஸ்எஸ் ஆதரவாளர். சங்க நிகழ்ச்சிகள் பலவும் இவரது ஆதரவில் நடப்பது வழக்கம்.

கல்வி நிறுவனம் என்ற அளவில் மிகவும் புகழ் பெற்றது. பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் படிக்கும் இந்த நிறுவனம் எல்லா துறைகளிளிலும் வல்லமை பெற்று விளங்குகிறது.

இவர்கள்தான் திறந்த வெளி சிறைச்சாலைக்கு ஒதுக்கப்  பட்ட நிலம் 58 ஏக்கரை ஆக்கிரமித்திருக்கிறார்கள் என்று குற்றம் சாட்டப் பட்டிருக்கிறது.

இன்று கூட திமுக தலைவர் முக ஸ்டாலின் சாஸ்திர பல்கலை ஆக்கிரமித்திருக்கும் 20.62 ஏக்கரை காலி செய்ய வேண்டும் என்றும் இதில் அரசு பாராமுகம் காட்டுவது ஏன் என்றும் கேட்டு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் இந்த நிலம் சிறைத்துரைக்கு ஒதுக்கப் பட்டதாகவும் அதில் இருந்தே சாஸ்த்ரா அதை ஆக்ரமித்து விட்டதாகவும் குற்றச்சாட்டு.

வருவாய் கோட்டாட்சியர் விரைவில் ஆக்ரமிப்பு அகற்றப்படும் என்கிறார்.

எப்படி அகற்ற முடியும்? அதில் இருக்கும் கட்டிடங்களை எப்படி அகற்றுவார்?

இதில் வேறு அங்கே ஒரு சட்டக்கல்லூரி இயங்கி வருகிறது.

ஆக்கிரமிப்பது எப்படி என்று சொல்லிக் கொடுப்பார்களா?

ஆக்ரமிப்பு முப்பது வருடம் முந்தையது என்றால் அது வருவாய் அதிகாரிகளின் கவனத்துக்கு வராமல் நடந்திருக்க முடியுமா?

சிறைத்துறை ஏன் தனக்கு ஒதுக்கப்  பட்ட நிலத்தை தன் அனுபோகத்தில் வைத்துக் கொள்ளவில்லை?    ஒரு அரசு நிலத்தை மற்றொரு அரசு துறைக்கு மாற்றும் போதுகூட அதில் தனியார் ஒருவர் ஆக்ரமிக்க முடியும் என்றால் அதை தடுக்க வேண்டிய அரசு அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை?   இதுதான் இப்போதைய கேள்வி?

இன்றைக்கு  எச் ராஜா தனக்கு  நீதி மன்ற அவமதிப்பு அறிவிப்பு அனுப்பிய நீதிபதி சி டி செல்வம் அடங்கிய பெஞ்ச் என்பதால் தான் இன்று தலைமை வழக்கறிஞர் முன்பு ஆஜராகவில்லை என்று அவர் வழக்கறிஞர் தெரிவித்திருக்கிறார். ஆக நீதிமன்றத்தையே யார் நீதிபதி என்று பார்த்து தான் அவர் ஆஜராவாராம். அந்த பென்ச் அவமதிப்பு வழக்கு தொடர முடியாது என்றும் அதற்கு தலைமை நீதிபதி பெஞ்சுக்கு மட்டும்தான் உரிமை உண்டு என்றும் ராஜா கட்சியாடி வருகிறார். ஆக அவர்களுக்கு என்றால் தனி சட்டம். அதுவும் அவர்கள் ஆட்சி என்றால் கேட்கவே வேண்டாம்.

இப்போது நடந்து கொண்டிருப்பது பாஜக ஆட்சி தானே. எடப்பாடி பாவம் என்ன செய்வார்?

எதையும் சாஸ்திரம் சம்பிரதாயம் பார்த்து செய்வார்களோ என்னவோ? ஆக்ரமிப்பு உள்பட.