கடந்த 22 ஆண்டுகளாக அண்ணா பல்கலைக் கழகம்தான் பொறியியல் பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கையை நடத்தி வருகிறது.
சென்ற ஆண்டும் ஒற்றைச் சாளர முறையில் நடத்தி நல்ல பெயர் வாங்கியது.
ஆனால் அதற்கான அனுமதியை தந்தது தமிழக அரசின் உயர் கல்வித்துறை. தொழில் நுட்ப கல்வி இயக்ககம் ( Directorate of Technical Education ) தான் அதற்கான அனுமதியை வழங்குகிறது. அதுவரையில் தமிழர்கள் தான் அண்ணா பல்கலையில் துணை வேந்தர்களாக இருந்து வந்திருக்கிறார்கள். ஆனால் பன்வாரிலால் புரோஹித் தான் கர்நாடகாவில் இருந்து எம் கே சூரப்பாவை நியமித்தார். அது ஒருவேளை இங்குள்ளவர்களுக்கு வருத்தம் அளித்திருக்கலாம்.
அதை வெளிக்காட்ட 2017 ல் அமைக்கப்பட்ட 3 ஆண்டுகள் கமிட்டியை இந்த ஆண்டு மறு சீரமைப்பு செய்து அதில் இயக்ககத்தின் கமிஷனர் விவேகானந்தனை இணை தலைவராக நியமித்தது. உடனே சூரப்பா கமிட்டியில் இருந்து தனது தலைவர் பொறுப்பை ராஜினாமா செய்தார். அது மட்டுமல்ல இந்த ஆண்டு அண்ணா பல்கலை தேர்வு செயல் பாடுகளில் பங்கேற்காது என்றும் அறிவித்தார்.
கல்வி இயக்ககம் நடத்தினால் அதில் அண்ணா பல்கலை பேராசிரியர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க மாட்டார்கள் என்பது கல்வித்துறைக்கே இழுக்கு.
யார் பெரியவர் என்ற மோதலில் பலியாவது மாணவர் சேர்க்கை என்பதை யாரும் சட்டை செய்ய வில்லை என்பதுதான் பரிதாபம்.
அண்ணா பல்கலைக் கழகம் மாணவர்களுக்கு உரியதே தவிர அதை நிர்வகிப்பவர்களுக்கு உரியது அல்ல என்பதை எம் கே சூரப்பா உணர மாட்டாரா??
பல்கலையின் மாண்பைக் குலைத்து விடாதீர்கள்!!!