கல்வி

5, 8 ம் வகுப்புகளுக்கு தேர்ச்சி கட்டாயம் இல்லை என்றால் பொதுத்தேர்வு ஏன்?

Share

மத்திய அரசு புதிய கல்வி திட்டத்தை இன்னும் அமுல்படுத்தவே இல்லை.

அதற்கு முன்பாகவே அதில் கண்ட அம்சங்களை அமுல்படுத்த அதீத ஆர்வம காட்டுகிறது அதிமுக அரசு.

செங்கோட்டையன் ஓரளவு நியாயமனவர் என்ற பிம்பத்தை உடைத்து எறிந்துவிட்டார்.  எல்லாரையும் விட அடக்கி வாசிக்கும் அடிமையாக இருக்கிறார்.

புதிய கல்வி  திட்டம் என்பதே பிற்பட்டோரையும் தாழ்த்தப்பட்டவர்களையும் கல்வியில் இருந்து முடிந்த வரை துரத்தி விரட்டி அடிப்பது என்பதாகத்தான் இருக்கிறது.

தேர்ச்சி கட்டாயம் இல்லை என்றால் ஏன் இந்த பொதுத்தேர்வு?

பிஞ்சுக் குழந்தைகளின் மனதில் அச்சத்தை ஏற்படுத்தி கல்வியே வேண்டாம் என்று வேறு வேலை பார்க்க போக வேண்டும் என்பதே அரசின் திட்டமாக இருக்கிறது. 

வேண்டாத தேர்வுக்கு கட்டணம் வேறு. இதில் கட்டணம் ரத்து என்ற சலுகை வேறு. அதுவும் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு மட்டும்  .

ஐந்தாம் எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வை ரத்து செய்து அரசு அறிவிக்கும் நாளை மக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.

பாமகவும் இந்த பொதுத் தேர்வை எதிர்க்கிறது. என்ன பதில் சொல்லப் போகிறது அரசு?

பாஜக வின் அடிமை அரசு என்ற முத்திரையை அதிமுகவுக்கு பெற்றுத்தரும் இந்த பொதுத் தேர்வை கைவிட்டு தன்மானம் காத்துக் கொள்ளுமா அரசு?

This website uses cookies.