நீட் மசோதா பிரச்னையில் நடந்த மோசடி சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய உள் துறை துணைச்செயலர் ராஜிஸ் எஸ் வைத்யா தாக்கல் செய்த அறிக்கையில் தெரிய வந்திருக்கிறது.
தமிழக அரசின் இரண்டு மசோதாக்களும் உள்துறை அமைச்சகத்துக்கு 20/02/2017 அன்றே கிடைத்ததாகவும் 11/09/2017ல் குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் குடியரசுத் தலைவர் இந்த மசோதாக்களை நிறுத்தி வைத்தும் நிராகரித்தும் 18/09/2017ல் உத்தரவிட்டதாகவும் அவற்றை 22/09/2017லேயே தமிழக அரசுக்கு அதற்கான ஆவணங்களுடன் இணைத்து திருப்பி அனுப்பி விட்டதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
எல்லா கட்சிகளும் நீட் மசோதா என்ன ஆயிற்று என்று கேட்டுக்கொண்டே இருக்கையில் மத்திய மாநில அரசுகள் கனத்த மௌனம் காத்தன.
எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை என்று கூட நிர்மலா சீதாராமன் கூறினார்.
பாராளுமன்ற தேர்தல் நடக்கும் போது சொல்ல வேண்டாம் என்று இருவரும் கள்ள மௌனம் காத்திருக்கிறார்கள்.
அதன் பலனை தேர்தல் முடிவுகள் காட்டிவிட்டன.
ஆனாலும் சட்டமன்றத்தில் கூசாமல் அப்படி எதுவும் எங்களுக்கு வரவில்லை என்று சட்ட அமைச்சர் சிவி சண்முகம் கூறினார். பச்சைப் பொய் அல்லவா?
ராஜினாமா செய்யச்சொல்லி திமுக தலைவர் ஸ்டாலின் கேட்டதற்கு சொன்னது பொய் என்றால் ராஜினாமா செய்ய தயார் என்று கூட அவர் கூறினார்.
இப்போது என்ன செய்ய போகிறார் சிவி சண்முகம்?
This website uses cookies.