மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த தின விழாக்களை கொண்டாடும் மத்திய அரசு அவரது பெயரை பயன்படுத்தும் அளவு அவரது கொள்கைகளை ஏற்றுக் கொள்கிறதா என்பதுதான் மிகப் பெரிய கேள்வி.
ஏற்றுக் கொள்கிறார்கள். உதட்டளவில். நடைமுறையில்?
1932 ல் காந்தி சேவக் சங்கத்தை தொடங்கினார். இன்று நாட்டின் 26 மாநிலங்களில் அதற்கு கிளைகள் உள்ளன. அதன் நோக்கம் தீண்டாமையை ஒழிப்பது மட்டுமல்ல தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதே சங்கத்தின் நோக்கம் .
தமிழ்நாட்டில் திருக்கோவிலூர் மதுரை என இரண்டு இடங்களில் பள்ளிகள் உள்ளன. இரண்டிலும் சுமார் நானூறு மாணவர்கள் பயில்கிறார்கள். எல்லாம் தாழ்த்தப்பட்ட மிகப் பிற்பட்ட வகுப்பினர். இரண்டிற்கும் சுமார் பத்துபேர் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாதவர்கள் பணி புரிகிறார்கள்.
இந்த இரண்டு பள்ளிகளுக்கும் கடந்த மூன்று ஆண்டுகளாக மத்திய சமூக நீதித்துறை நிதி ஒதுக்குவதை நிறுத்தி விட்டது. வேறு வழியில்லாமல் பள்ளிகளை மூடும் முடிவுக்கு அந்த சங்கம் வந்து விட்டது. 15 பள்ளிகள் 6 ஆக குறைந்துவிட்டன.
இதுதான் நரேந்திர மோடி அரசு காந்திக்கு செலுத்தும் மரியாதை.
விளக்கமாவது தருவார்களா??!!
This website uses cookies.