நீட் தேர்வு பிரச்னையில் நாங்கள் சொல்வதை கேட்க வைப்போம் என்று பாஜக-வின் அமைச்சர் பியுஷ் கோயல் சென்னையில் பேட்டி கொடுக்கிறார்.
மறுத்து பேசத்தான் அதிமுக-வில் ஆள் இல்லை.
தேர்தல் நேரத்திலேயே இப்படி மிரட்டுகிறார்களே? சாதாரண காலத்தில் எப்படி மிரட்டுவார்கள்.!
அதிமுக தனது தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வில் விலக்கு வாங்கிக் தருவோம் என்று உறுதியளித்திருந்தது.
சட்ட மன்றத்தில் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப் பட்ட மசோதா என்னவாயிற்று என்று சொல்லக் கூட அதிமுக அமைச்சர்களுக்கு முடிய வில்லை.
நீட் தேர்வு என்பது எத்தனை பேர் தேர்வாகிறார்கள் என்பது முக்கியம் அல்ல.
என்ன பாடத் திட்டத்தில் தேர்வு நடத்தப் படுகிறது என்பதுதான் முக்கியம்.
என்சிஇஆர்டி, சிபிஎஸ்இ, சிஒபீஸ்இ மற்றும் மாநில பாடத் திட்டங்கள் இருந்தாலும் எல்லாவற்றையும் கலந்து நீட் பாடத்திட்டம் என்று ஒன்றை அறிவித்தாலும் அதை எப்போது அறிவிக்கிறார்கள் என்பதுதான் முக்கியம்.
ஆண்டு முழுதும் பயிலும் பாடத் திட்டம் ஒன்று. நீட்டில்கேட்கப்படும் பாடத்திட்டம் வேறொன்று என்றால் அது அயோக்கியத்தனம் இல்லையா?
அத்தகைய அகில இந்திய தேர்வு நமக்கு எதற்கு?
கல்வி மாநிலப் பட்டியலில் இருந்தால் இந்த கொடுமை நிகழாதல்லவா?
இப்படி காட்டிக் கொடுக்கும் ஆட்சியாளர்கள் இருந்தால் நமது உரிமைகளை எப்படி பாதுகாக்க முடியும்?