கல்வி

இந்தி படிக்க சொல்கிறாரா மருத்துவர் ராமதாஸ்? மோடி வலையில் விழுந்தாரா?

Share

எல்லா பிரச்னைகளிலும் முதன்மை கருத்துக்களை முன் வைப்பவர் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்.

சமீபத்தில் சென்னையை சேர்ந்த ஆபிரகாம் சாமுவேல் என்பவர் மும்பை விமான நிலையத்தில் இம்மிகிரஷன் கிளியரன்ஸ் வாங்க முயற்சித்தபோது அங்கே பணியில் இருந்த அதிகாரி இந்தியில் கேட்டதற்கு எனக்கு இந்தி தெரியாது ஆங்கிலம் தான் தெரியும் என்று சொன்ன பிறகும் அவரை நிறுத்தி வைத்திருக்கிறார்.

உடனே விமானத்தை பிடிக்க வேண்டி இருந்ததால் புகார் செய்யாமல் இணைய தளத்தில் சம்பவத்தை வெளியிட்டார். அவர் மீது விசாரனை நடந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் அந்த அதிகாரி மீண்டும் அதை உறுதிபடுத்தும் வகையில் இலங்கையில் இருந்து போலி பாஸ்போர்ட் மூலம் வருபவர்கள் இருப்பதால் இதையெல்லாம் விசாரிக்க வேண்டி உள்ளது என்று நியாயப்படுத்தி இருக்கிறார். இந்தியாவில் இருப்பவர்கள் என்றால் இந்தியில்  பேசினால்தான் ஏற்றுக்கொள்வீர்களா?

இந்த பிரச்னை ஒருபுறம். இதை  கண்டித்து அறிக்கை வெளியிட்ட மருத்துவர் ராமதாஸ் அந்த அதிகாரியை கண்டித்திருந்த தோடுவிடவில்லை. ‘ இந்த நிலையை ஏற்படுதியவர்களுக்கு என்ன தண்டனை ?’ என்று ஒரு கேள்வியையும் எழுப்பி இருக்கிறார். 

இந்தி பேச முடியாத நிலையை ஏற்படுத்தியவர்கள் என்று யாரை சொல்கிறார். ?      தமிழ்நாட்டில் இந்தி கட்டாயமாக  கற்பிக்கும் முயற்சிகளை வெற்றிகரமாக தடுத்து வருகிறோம். அது தவறு என்கிறாரா? கற்றுக் கொடுத்திருந்தால் அந்த தமிழனுக்கு தடை வந்திருக்குமா என்கிறாரா?

பாமாக சமீபகாலமாக மோடியையும்  பாஜக-வையும் அதிகம் விமர்சிப்பதில்லை.        10% இட ஒதுக்கீடு சட்டத்தை விமர்சித்து பேசிய அன்புமணி எதிர்த்து வாக்களிக்க வில்லை. மாறாக வெளிநடப்பு செய்திருக்கிறார். அதிமுகவும் வெளிநடப்பு செய்தது.

பாஜக – அதிமுக – பாமக கூட்டணி வந்துவிடும் என்று ஆரூடம் சொல்பவர்கள் வெற்றிபெருவார்களோ?

This website uses cookies.