மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்கள் குறைந்த அளவில் சேருவதற்கான காரணம் குறித்து அறிக்கை பெற்ற பின் அவர்களுக்கு உள் ஒதுக்கீடு ஒதுக்குவது பற்றி முடிவெடுக்கப் படும் என்று தெரிகிறது.
ஓய்வு பெற்ற நீதிபதி பொன். கலையரசன் தலைமையில் ஒரு குழு இதற்காக அமைக்கப் பட்டிருக்கிறது.
நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என்பதை அரசு ஒப்புக் கொண்டு விட்டதா என்ற கேள்வியை இது எழுப்புகிறது.
இருப்பினும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு கொடுப்பது என்ற முடிவில் அரசு உறுதியாக இருந்து அமுல் படுத்த வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
இதில் கால தாமதம் கூடாது. மாணவர்களுக்கு ஏதும் நல்லது நடந்து விடக் கூடாது என்று ஒரு கூட்டம் அலைகிறது. அவர்கள் இதற்கும் நீதிமன்றம் சென்று தடை பெற முயற்சிப்பார்கள். அதற்கு இடம் கொடுக்காத வகையில் அரசின் முடிவு அமைய வேண்டும்.
இல்லாவிட்டால் நீட் தேர்வை ஒழிக்க முடியாத தங்கள் பலவீனத்தை மறைக்க இந்த நாடகத்தை அரசு நடத்துகிறது என்றுதான் மக்கள் கருதுவார்கள்.
உள் ஒதுக்கீடு நடைமுறைக்கு வரும் வரை இந்த சந்தேகம் இருந்து கொண்டுதான் இருக்கும்.