திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுதேர்வை ரத்துச் செய்து விட்டு அனைவரையும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க கோரி தீர்மானம் நிறைவேற்றப் பட்டு இருக்கிறது.
அதற்கு இதுவரையில் அரசிடம் இருந்து நேரடியாக எந்த பதிலும் இல்லை. மாறாக அதிகாரிகள் மட்டத்தில் ஊரடங்கு முடிந்தவுடன் தேர்வுகள் நடத்தப் படும் என்று சொல்லப் பிடுகிறது. முன்பே அமைச்சர் செங்கோட்டையன் தேர்வை ரத்து செய்வது என்ற பேச்சுக்கே இடமில்லை என்று சொன்னார்.
ஜூன் மாதம் கல்வியாண்டு துவங்கியபின் எப்படி வகுப்புகள் நடத்தி தேர்வுகள் நடத்துவீர்கள். இரண்டு மாதம் வகுப்புகள் நடத்தாமல் பாடங்களை சொல்லிக் கொடுக்காத நிலையில் தேர்வுகள் நடத்துவோம் என்றால் மாணவர்களை நிறுத்துவதற்கு திட்டம் போடுகிறீர்களா ?
அவகாசம் இல்லை. அதனால் ஒன்பது பிளஸ் ஒன் மாணவர்களை தேர்ச்சி பெற்றதாக அறிவித்து விட்டீர்கள் .
இவர்களையும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தால் என்ன கெட்டுவிடும்?
எந்தக் கல்வியாளரும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
மாணவர்கள் நலன் கருதி அரசு முடிவெடுக்க வேண்டும். பள்ளிக் கல்வித்துறையில் மத்திய அரசின் மறைமுக ஆதிக்கம் இருக்கிறது என்ற குற்றச்சாட்டு வலுவாக உள்ள நிலையில் அரசு விரைந்து நல்ல முடிவெடுக்க வேண்டும்.
This website uses cookies.