மாஸ்டர் ஆடியோ வெளியீட்டு விழாவில் விஜய் சேதுபதியும் விஜயும் பேசிய பேச்சுகள் மத வெறியர்களுக்கு சாட்டையடி கொடுப்பதாக அமைந்து இருந்தது.
மனிதன் காப்பாற்ற வேண்டிய நிலையில் கடவுள் இல்லை என்று விஜய் சேதுபதி பேசியதுதான் ஹைலைட் .
இன்று நாட்டில் நடக்கும் கலவரம் பெரும்பாலும் கடவுள் மதம் சார்ந்த தாகவே இருக்கிறது.
அதிலும் கடவுளை காப்பாற்ற முனையும் மனிதர்கள் கடவுளின் பெயரால் செய்யும் அட்டூழியங்கள் அந்த கடவுளுக்கே அடுக்காது.
மதம் கடவுள் எல்லாம் தனிப்பட்ட நம்பிக்கை சார்ந்தது. அதை பொது பிரச்னையாக்க முயலும் எவரும் அதில் இருந்து ஆதாயம் அடைய முயற்சிக்கிறார் என்றுதான் பொருள்.
முன்பே நீங்கள் கிறிஸ்தவத்தை பரப்புகிறீர்களா என்று கேட்டதற்கு போய் வேற வேல இருந்தால் பாருங்கடா என்று காட்டமாக பதில் கொடுத்து அவர்கள் வாயை அடைத்தவர்தான் விஜய் சேதுபதி.
அதேபோல் விஜயும் தன் பங்குக்கு தன் மீது மலரையும் இலைகளையும் கற்களையும் போடுவதை பற்றி கவலைப்படாமல் தன் போக்கில் போகிற நதியை போல் தான் பயணிக்க விரும்புவதாக சொல்லி சமீபத்தில் நடந்த வருமான வரி ரைடை சுட்டிக் காட்டி பேசி தன் மன வலிமையை காட்டினார்.
மொத்தத்தில் மாஸ்டர் பட ஆடியோ வெளியீட்டு விழா பல ஊகங்களுக்கு வித்திட்டு விட்டது.
This website uses cookies.