வாய்ப்பு கிடைத்தால் தமிழர்களால் சாதிக்க முடியும் என்று ஆசிய தடகள போட்டியில் 800 மீட்டர் ஓட்டப பந்தயத்தில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்திருக்கிறார் திருச்சி முடிகண்டம் கிராமத்தை சேர்ந்த ஏழை விவசாயியின் மகள் கோமதி.
விடாமுயற்சி காரணமாக இருபது வயதில் தொடங்கி பல போட்டிகளில் பங்கேற்று தந்தை இறந்து பயிற்சியாளர் இறந்து பல தடைகளை கடந்து முப்பது வயதில் இந்த சாதனையை அவர் புரிந்திருக்கிறார்.
முதல்வர் தொடங்கி எதிர்கட்சி தலைவர் உட்பட எல்லாரும் பாராட்டும் ஆதரவும் தெரிவித்து இருக்கிறார்கள்.
சாதாரண பின்னணி கொண்டவர்கள் கூட பயிற்சியும் வாய்ப்பும் கிடைத்தால் விளையாட்டில் சாதிக்க முடியும் என்பதற்கு கோமதி ஒரு சான்று.
தமிழக அரசு தகுந்த முறையில் அவரை கௌரவிக்க விக்க வேண்டும். மற்றவர்களுக்கு அந்த கௌரவம் உந்து சக்தியாக மாற வேண்டும்.
விளையாட்டுக்கு தமிழக அரசு அதிக நிதி ஒதுக்க வேண்டும். திறமை உள்ளவர்களை கண்டறிந்து அவர்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்து சாதனைகளை படைக்க உதவ வேண்டும்.
கொசுறு; தினமலர் பத்திரிகை மூன்றாம் இடம் பிடித்த வீராங்கனையை மிகப் பெரிதாக படம் போட்டு பாராட்டி விட்டு அதே போட்டியில் முதல் இடம் பிடித்து தங்கம் வாங்கிய கோமதியை சிறிதாக படம் போட்டு தனது பெரிய புத்தியை காண்பித்து இருந்தது. அவர்கள் திருந்த மாட்டார்கள் ?!!