மத்திய பிரதேசத்தின் ரத்லாம் வட்டத்தின் 38 ரயில்களில் மசாஜ் சேவை செய்யப்படும் என்று அதன் வட்டார மேலாளார் அறிவித்துள்ளார்.
தங்கம், வைரம், பிளாட்டினம் என்று பெயர் இடப்படும் திட்டங்களுக்கு Rs.100,200,300 என கட்டணம் நிர்ணயிதிருக்கின்றனர்.
இதற்கு ஒரு ஒப்பந்தம். ஒரு ரயிலுக்கு மூன்று அல்லது நான்கு மசாஜ் செய்பவர்கள் இருப்பார்கள். அவர்கள் தலை மற்றும் கால்களுக்கு மட்டும் மசாஜ் செய்வார்கள். பயண சீட்டு வாங்கி பயணம் செய்யும் அவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு ஆட்படுத்தப்படுவார்கள்.
பயணிகளுக்கு பயண கால வசதிகள் செய்து கொடுப்பதை விட்டு இப்படி எல்லாம் சிந்திக்கிறார்களே உருப்படுமா ரயில் பயணம்.
அதில் வரும் பிரச்னைகளை தீர்ப்பதற்கு யார் இருப்பார்கள்?
ரயில்வே காவல் துறைக்கு இதுவே ஒரு தலைவலியாக போய்விடாதா?
ஆண்டுக்கு 90 லட்சம் வருவாய் கிடைக்கும் என்று கணக்கிட்டிருக்கிறார்கள். வராவிட்டால் திட்டத்தை திரும்ப பெறுவார்களா?
வருவாய்க்காக இப்படி எல்லாம் சிந்திப்பது சரியா?
வேலை வாய்ப்புகளை இப்படியா உருவாக்க வேண்டும்?
முன்னோட்டமாக எப்படி நடக்கிறது என்பதை பார்த்துவிட்டு விரிவாக்குவதா கைவிடுவதா என்பதை முடிவு செய்வார்கள்.
அங்கேதான் எப்படி எல்லாம் சிந்திப்பார்கள்??!!