புகழ் படைத்தவர்கள் எல்லாம் அறிவாளிகள் அல்ல என்பதை ராதாரவி அவ்வப்போது நிருபித்து வருகிறார்.
எம் ஆர் ராதாவின் மகன் என்பதில் இருந்து இவரும் திறமை மிக்க நடிகர் என்பதில் சந்தேகம் இல்லை.
ஆனால் எனக்கு என் அப்பன் சேர்த்து வைத்த சொத்து போதும் என்று அடிக்கடி சொல்பவர். அப்பா நாத்திகர் ஆயிற்றே நீங்கள் எப்படி பாஜகவில் சேர்ந்தீர்கள் என்றால் மட்டும் ஏன் என் தாத்தா ஆத்திகர்தானே என்கிறார்? சுயம்பு என்றும் அடிக்கடி பீற்றிக் கொள்வார். எப்படி என்பதுதான் தெரியவில்லை.
ரவிக்கு வாய் கொஞ்சம் ஜாஸ்தி. அடிக்கடி எதையாவாது சொல்லி தன்னை பிரச்னைக்கு உட்படுத்திக் கொள்வார்.
சமீபத்தில் குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பான பாஜக கூட்டத்தில் பங்கேற்றவர் முஸ்லிம்களுக்கு எதிரானது இந்தசட்ட்ம் இல்லை என்று சொல்ல விரும்பி முஸ்லிம்களுக்கு ஏதாவது பிரச்னை என்றால் நானே முஸ்லிமாக மாறுவேன் என்றார். .
இதை பாஜகவினரே ரசிக்கவில்லை.
ஆமா தெரியாமதான் கேக்குறோம். இதற்கெல்லாமா மதம் மாறுவார்கள்? கொள்கை புடிச்சிருக்கு, பொண்ணு புடிச்சிருக்கு, ஆதாயம் கெடைக்குது என்று ஏதாவது சொல்லியிருந்தால் கூட புரிந்துகொள்ளலாம்.
தினம் தினம் முஸ்லிம்களுக்கு ஏதாவது பிரச்னை பல ரூபங்களில் வந்து கொண்டுதான் இருக்கும். அதுவும் பாஜக ஆட்சியில் அரசு மத வாதத்தை கடைப்பிடிப்பதால் பிரச்னைகள் வரத்தான் செய்யும். அதற்காக அவர்களுக்கு ஆதரவாக போராடலாமே தவிர அரசை அகற்ற உதவலாமே தவிர மதம் மாறுவது என்பது எப்படி அவர்களுக்கு ஆறுதல் அளிப்பதாக இருக்கும்? தீர்வாக அமையும்?
நடிகர் ஜெய், சிம்புவின் சகோதரர், இசை அமைப்பாளர் யுவன் போன்ற பலர் இஸ்லாத்திற்கு மாறியிருக்கிறார்கள். அதெல்லாம் தனிப்பட்ட நம்பிக்கை சார்ந்த விஷயம். இதில் ஏன் அரசியலை கலக்கிறார்கள்?
நடிகர்கள் சீரியசான விஷயங்களையே காமெடி ஆக்கி விடுகிறார்கள். ராதாரவி அதற்கு ஒரு உதாரணம்.