அரசியலில் எல்லாக் கட்சிகளிலும் ஒரு ரவுண்டு போய் வந்தவர் ராதாரவி.
திமுக எல்லா சலுகை களையும் கொடுத்து எம் எல் ஏ ஆக்கி அழகு பார்த்தது. அதிமுகவுக்கும் போய் அங்கும் பல சலுகைகளை அனுபவித்தார்.
இரண்டு கட்சிகளிலும் நட்சத்திர பேச்சாளர்.
இங்கிருந்து அவர்களை திட்டுவதும் அங்கிருந்து இவர்களை திட்டுவதும் இவருக்கு கைவந்த கலை.
இவருக்கும் மறைந்த நடிகர் எஸ் எஸ் சந்திரனுக்கும் ஜெயலலிதா பல சலுகைகளை அள்ளித் தந்திருக்கிறார்.
இத்தனைக்கும் எம் ஜி ஆரை சுட்ட எம் ஆர் ராதாவின் மகன் என்றாலும் திராவிட இயக்கத்தில் எம் ஆர் ராதாவுக்கு இருந்த செல்வாக்கு அவரது வாரிசுகளுக்கு இரண்டு திராவிட கட்சிகளிலும் பதவிகளை அள்ளித் தந்தது.
வாயை வைத்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டார் ரவி. எதையாவது சொல்லி சிக்கலில் மாட்டிக் கொள்வது இவருக்கு விருப்பமான பொழுது போக்கு .
திமுகவில் இருந்து நயன்தாரா பற்றி ஏடா கூடமா பேசி விலக்கப்பட்ட பின் அதிமுகவில் சேர்ந்தார்.
அங்கே வசூல் முன்ப போல் இல்லை போல் இருக்கிறது.
திடீர் என்று நேற்று அகில இந்திய பாஜக செயலாளர் முரளிதர் ராவ் முன்னிலையில் பாஜகவில் சேர்ந்து விட்டார்.
இனி என்ன ஆகப் போகிறதோ பாஜக?
அதுவும் பாஜக வுக்கும் அதிமுகவுக்கும் உள்ள உறவு கணவன் மனைவி உறவு போன்றது என்று சொன்ன முரளிதர் ராவ் முன்னிலையிலேயே சேர்ந்திருக்கிறார். இனி அதிமுகவை எப்படி விமர்சிப்பார்.?
எல்லாம் சரி. எம் ஆர் ராதா பெரியாரின் தொண்டர். அந்தக் காலத்திலேயே சுயமரியாதை பிரசாரம் செய்த தூய நாத்திகர். எந்தக் காரணம் கொண்டும் தன் கொள்கையை எம் ரா ராதா விட்டுக் கொடுத்ததே இல்லை. அதுதான் எம் ஆர் ராதாவுக்கு தனிச்சிறப்பு.
ரத்தக்கண்ணீர் எம் ஆர் ராதாவின் வரலாற்று ஓவியம. அதை ரவி நடத்தி பெயர் எடுத்திருக்கிறார். அதில் வரும் திருவாரூர் தங்கராசுவின் நாத்திக வசனங்களை இனி ரவி நாடகம் போட்டால் மாற்ற வேண்டி வரும் என்பதால் நடத்த மாட்டார் என்று நம்பலாம்.
அதனால் தான் பெரியார் திடலில் அவர் பெயரில் திடல் அமைத்திருக்கிறார்கள்.
பாஜக சனாதனிகளின் கூடாரம். இனி ராதாரவி அங்கே போய் பஜனை பாட வேண்டியதுதான்.
அவர்களும் இவரை நன்றாக பயன்படுத்தி எம் ஆர் ராதா பேசிய கருத்துக்களுக்கு எதிராக இவரை பயன்படுத்துவார்கள். அதற்கும் இவர் உடன் பட்டே ஆக வேண்டும்.
உனக்கு என்ன சொத்தா இல்லை?
ஏன் தந்தையை காட்டிக் கொடுக்க வேண்டும் என்ற விமர்சனங்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார் ரவி?
தந்தையைப் போல் நாத்திகர் இல்லையென்றாலும் சுயமரியாதை உள்ள இந்துவாக மற்ற திராவிட இயக்க நண்பர்களைப் போல் இருந்திருக்கக் கூடாதா என்ற கேள்வி எழுகிறதல்லவா?
அமித்ஷா விளையாட்டு இன்னும் என்னவெல்லாம் சித்து விளையாட்டுகளை அரங்கேற்றப் போகிறதோ?
ரவியின் பின்னால் அவரது வளர்ப்பு நாய் கூட போகாது என்றாலும் இப்படி தனி மரமாக அவர் நிற்கப் போவது வருத்தமாகத்தான் இருக்கிறது.
ஒரே ஒருவர் மகிழலாம். அவர் சின்மயி. தன் சமுதாயக் கூடாரத்துக்குள் கடைசியில் புகலிடம் தேடி வந்துவிட்டார் ரவி என்பதால் இருக்கலாம் அந்த மகிழ்ச்சி.
This website uses cookies.