பாலா படம் என்றால் பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். அவ்வளவு பெரிய டைரக்டர். அவர் ஒரு படத்தை இயக்கி அது சரியில்லை என்பதற்காக அப்படியே கிடப்பில் போட்டு விட்டு அதையே வேறு ஒரு டைரக்டரை வைத்து மீண்டும் கோடிக்கணக்கில் செலவு செய்து வெளியிட்ட தைரியம் நடிகர் விக்ரமுக்கு மட்டுமே இருந்தது.
பிறகு வெளி வந்த ஆதித்ய வர்மா ஓரளவு வரவேற்பை பெற்றாலும் வசூலில் சாதிக்க வில்லை. ஆனாலும் தன் முதல் படத்தில் தேறி விட்டார் துருவ் விக்ரம் என்றுதான் சொல்ல வேண்டும்.
அதெல்லாம் சரி. பாலா எப்படி இந்த படத்தை எடுத்திருந்தார் என்பதை பார்க்கவும் ஒப்பிடவும் தமிழ் ரசிகர்கள் ஆவலாக இருக்கிறார்கள்.
ஒரிஜினல் எப்படி இருந்தாலும் பாலாவின் கைவண்ணம் கொஞ்சமாவது இருக்காதா என்ன?
யு டியுபிலாவது பாலாவின் வர்மா படத்தை வெளியிடுங்கள் விக்ரம்?