பொழுதுபோக்கு

ரஜினி ரசிகரால் விஜய் ரசிகர் கொலை.. ரசிகர் மன்றங்களை தடை செய்யும் நேரமிது?

Share

கொரொனா நிவாரண நிதி யார் அதிகம் கொடுத்தது என்ற வாக்குவாதத்தில்  விஜய் ரசிகரை  ரஜினி ரசிகர் கொலை செய்திருக்கிறார்.

கொலையான யுவராஜ் கூலி தொழிலாளி.கொலை  செய்த தினேஷ் பாபு வும் தொழிலாளிதான். மது அருந்தி வாதத்தில் ஈடுபட்ட போது இந்த விபரீதம் நிகழ்ந்திருக்கிறது.

இதை விட ஒரு இழிவான செய்தி தமிழ் சமுதாயத்தில் இருக்க முடியுமா?

யாருக்காவது ரசிகராக இருப்பது ஒருவரின் தனிப்பட்ட உரிமை. ஆனால் இந்த சினிமா ரசிகர் கூட்டம் எத்தனை விரும்பத் தகாத விளைவுகளை சமுதாயத்தில் ஏற்படுத்தி வருகிறது.

ரசிகர் மன்றங்களின் நடவடிக்கைகள் கண்காணிக்கப் படுகின்றனவா ?

சினிமா வெளிவந்தால் பால் அபிஷேகம் செய்வதில் தொடங்கி நடிகரை  பூஸ்ட் செய்யும் அத்தனை  வேலைகளையும் செய்கிறார்கள். நடிகர்களே அதற்கு துணை  போவது  உண்மைதானே ?

இது ஒரு சமுதாய தீமை. முடிந்தால் தடை.   முடியாவிட்டால்  கடுமையான கட்டுப்பாடுகள் .

ஏதாவது செய்து இவர்களை திருத்த அல்லது தடுக்க அரசு ஆராய வேண்டும்.

ஆட்சியில் இருப்போர் ரசிக மன்றங்களின் தயாரிப்பு என்பதில்  ஓரளவு உண்மை இருந்தாலும் அவர்களும் இப்போது மறு பரிசீலனை செய்ய தயாராகவே இருப்பார்கள்.ஏனென்றால் அவர்களிடம் தான் இப்போது கதாநாயகர்கள் யாரும் இல்லையே?

This website uses cookies.