கிறித்தவராக மாறி விட்டாரா என்ற கேள்விக்கு ‘ போய் வேற வேலை இருந்தா பாருங்கடா” என்று பதில் சொல்லி சாட்டை அடி கொடுத்திருக்கிறார் விஜய் சேதுபதி!
ஜேப்பியாரின் மகள் ரெஜினா சினிமா உலக பிரபலங்களை கிறித்துவ மதத்துக்கு மாற்றும் வேலையில் ஈடுபட்டிருக்கிறார் என்று புகார் எழுந்திருக்கிறது.
அதில் விஜய் சேதுபதி , ஆர்யா, ரமேஷ் கன்னா, ஆர்த்தி போன்றவர்கள் சிக்கி விட்டார்கள் என்றும் செய்தி பரவியது.
இது பற்றி கேட்டபோதுதான் விஜய் சேதுபதி இப்படி பதில் சொல்லி மூக்கை உடைத்திருக்கிறார்.
யார் எந்த மதத்துக்கு போகிறார் என்பது அவரவர் தனிப்பட்ட விடயம். ஏன் அது பொது செய்தியாகிறது.
மோகன் சி லாசரஸ் போன்ற பெந்தேகொச்தே பிரசாரகர்கள் இந்த விடயத்தை பெரிது படுத்தி விடுகிறார்கள். அவர்தான் சமீபத்தில் அறுபது லட்சம் கிறித்தவர்களும் தலா ஒரு மாற்று மதத்தவரை ஏசுவை விசுவாசிக்கிறவராக மாற்ற வேண்டும் . அப்படி மாற்றினால் மூன்றே ஆண்டுகளில் தமிழ் நாட்டையே ஆட்டி விடலாம் என்று பேசினார்.
இப்படி ஒரு முஸ்லிம் பேசினால் , இந்து பேசினால் சீக்கியர் பேசினால் பௌத்தர் பேசினால் என்ன ஆகும். கலவரம்தான் வரும். உலகம் உள்ளவரை எல்லா மதங்களும் இருந்துதான் தீரும். யாரும் யாரையும் அழித்து விட முடியாது. பின் ஏன் இப்படி அலைகிறார்கள்? அது அவர்களுக்கு தொழில். சாதாரண கிறித்துவ, இஸ்லாமிய இந்து மக்கள் தங்கள் தங்கள் பிழைப்பை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த பிரசாரகர் தொழில் செய்பவர்கள்தான் சமூகத்தில் மோதலை உருவாக்குகிறார்கள்.
விஜய் சேதுபதி மதம் மாறினால் அதை அவரே சொல்வார் . மாறினாலும் அது அவர் விருப்பம். அதை ஏன் பிரச்னை ஆக்க வேண்டும்?
விஜய் சேதுபதி காஷ்மீர் பிரச்னை பற்றி அறிவார்ந்த கருத்தை வெளியிட்டார். அதாவது காஷ்மீர் மக்கள்தான் தங்கள் நிலைப்பாட்டை தீர்மானிக்க வேண்டும் . நாம் நமது விருப்பத்தை அவர்கள் மீது திணிக்கக் கூடாது என்றார்.
சபாஷ் விஜய் சேதுபதி?