ஆம். கொரொனாவிற்கு எதிராக ஊரடங்கை எதிர்க்கும் ஒரே அதிபர் பிரேசிலின் அதிபர் போல்சனரோ .
இத்தனைக்கும் அந்த நாடு ஏறத்தாழ 2500 பேரை கொரொனாவினால் இழந்திருக்கிறது. இன்னும் அச்சுறுத்தல் இருக்கிறது.
அந்த நாட்டின் சுகாதாரதுறை அமைச்சர் அதிபரின் கருத்தை எதிர்த்து கருத்து சொல்லி மக்களை ஊரடங்கை கடைபிடிக்க கோரினார். உடனே அவரை பதவி நீக்கம் செய்து விட்டார் அதிபர்.
நாட்டில் மக்கள் ஊரடங்குக்கு எதிராக போராட்டம் கூட நடத்தினார்கள். அதற்கு அதிபரின் ஆதரவு இருந்தது.
இன்று உலகின் பல பகுதிகளில் ஊரடங்குக்கு எதிராக போராட்டங்கள் நடக்கின்றன.
ஆனால் நோயின் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே போகும்போது சமூக விலகலை விலக்க முயற்சிப்பது அறிவுடைமை அல்ல.
நல்லவேளையாக இந்தியாவில் அந்தக் குரல்கள் எழவில்லை.
This website uses cookies.