முக ஸ்டாலினுக்கு பதில் சொல்வதாக நினைத்துக் கொண்டு நேற்று முதல்வர் சொன்ன இரண்டு செய்திகள் காமெடியாகப் போகும் என்று அவரே எதிர்பார்த்திருக்க மாட்டார்.
ஏழைகளுக்கு கொரொனா வராது என்பது முதல் கண்டுபிடிப்பு.
இன்னும் இரண்டு மூன்று நாளில் கொரொனா தமிழ்நாட்டில் என்பது இரண்டாவது கண்டுபிடிப்பு.
எந்த பொருளில் பேசினார் என்று அவர்தான் விளக்கம் கொடுக்க வேண்டும்.
இரண்டுக்கும் அறிவியல் ஆதாரம் இல்லை என்பது எல்லாருக்கும் தெரியும். ஏன் முதல்வருக்கும் தெரியும்.
இருந்தாலும் நம்பிக்கை தருவதற்காகவும் நல்லெண்ணத்தின் அடிப்படையிலும் அப்படி பேசினார் என்று எடுத்துக் கொண்டாலும் ஒரு முதல்வர் அப்படி பேசலாமா என்ற கேள்விக்கு பதில் இல்லை.
நோய்க்கு பராரி என்று தெரியுமா பணக்காரன் என்று தெரியுமா?
ஏழைக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் என்பது அவர்களை பாராட்டுவதா இகழ்வதா?
எதிர்ப்பு சக்தியோடு நீ ஏழையாகவே இரு என்கிறார்களா ?
நோய் வாய்பட்டவர்கள் பணக்காரர்கள் அவர்களுக்கு நிவாரணம் தேவையில்லை என்கிறார்களா ?
ஒருநாள் நோய் வாய்ப்பட்டவர்கள் இருபத்து ஐந்து பேர் என்றதும் இரண்டு மூன்று நாளில் நோயே இருக்காது என்பது எந்த அடிப்படையில்? அது அலட்சியத்துக்கு வழி வகுத்து விடாதா ?
முதல்வர் பேசும்போது கொஞ்சம் எச்சரிக்கை உடன் பேசினால் நல்லது. இல்லாவிட்டால் அவரது பதவிக்கு உரிய கண்ணியம் கெட்டு விடும்.
This website uses cookies.