இக்கட்டான சமயத்தில் தூய்மைப் பணி செய்யும் தொழிலாளர்கள் மீது பொதுமக்களுக்கு வந்திருக்கும் மரியாதை மகிழ்ச்சி அளிக்கிறது.
பல இடங்களில் தூய்மைப் பணியாளர்களுக்கு மக்கள் மாலை அணிவித்து பாத பூஜை செய்து உடைகள் வழங்கி தங்கள் நன்றியை தெரிவித்து வருகிறார்கள்.
இது வரவேற்க வேண்டிய மனப்போக்கு.
தூய்மைத் தொழிலில் ஈடுபட்டு வந்திருக்கும் மனிதர்களை இரண்டாம் தர மனிதர்களாகவே நடத்தி வந்திருக்கிறோம்.
ஏன் மக்கள் மனதில் இந்த மாற்றம் என்றால் அது கொரானா தந்தது என்பதுதான் பதில்.
இந்த மாற்றம் நிலைக்க வேண்டும். தூய்மைப் பணிக்கு பட்டதாரிகள் போட்டி போடுகிறார்கள். வேலை இல்லா திண்டாட்டம் உச்சத்தில். எப்படி சமாளிக்க போகிறோம்?
இந்த மனமாற்றம் மக்களிடம் ஏற்பட்டால் போதாது. அரசிடம் ஏற்பட வேண்டும். அவர்களுக்கு உரிய ஊதியத்தை உடனடியாக இரட்டிப்பாக்க வேண்டும். ஓய்வூதியம் தர வேண்டும்.
அப்போதுதான் இந்த தொழிலுக்கு மரியாதை கூடும்.
கீழ்த்தட்டு மக்கள் மீது உண்மையான அக்கறை இருக்கிற அரசுகள் இதைத்தான் செய்ய வேண்டும்.
பொருளாதார சமத்துவம் வரவேண்டும் என்றால் தொழில்களுக்கு இடையே ஊதிய சமச்சீர் நிலவ வேண்டும்.
ஆங்காங்கே நகர்ப்புற சங்கங்கள் இதற்கு வழி காட்ட வேண்டும். அவர்கள் ஊதிய உயர்வு அளிக்க அரசிடம் அனுமதி பெற தேவையில்லை.
இவர்களை பார்த்து நாளை அரசும் தர வேண்டிய நிலையை ஏற்படுத்துங்கள்.
தூய்மைப் பணி தொழிலாளர்களை மனிதப் பண்புடம் நடத்த வேண்டும் என்ற உணர்வு வந்திருப்பது நல்லதே.
வாழ்க கொரானா தந்த விழிப்புணர்வு.