மத்திய அரசுப் பள்ளிகளில் சிறப்பு வேத பாடங்கள் பயில சிறப்பு வேத பாட போதனை பிரிவு அதாவது வேதிக் போர்டு . அதற்கு வேதாஞ்சலி என்று பெயர்.
மத்திய அரசின் பள்ளிக்கூடங்களில் வரும் கல்வியாண்டு முதல் மூன்றாம் மொழிப் பாடமாக சமஸ்கிருதம் கட்டாயம். வரும் ஆண்டுகளில் எட்டாம் வகுப்புக்கு மேல் பனிரெண்டாம் வகுப்பு வரை சமஸ்கிருத கல்வி.
இதெல்லாம் மத்திய மந்திரி ஸ்மிருதி இராணி தலைமையில் நடைபெற்ற கல்வி ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப் பட்டு அமைச்சர் பேசிய பேச்சு.
மற்ற மொழி பேசும் மக்களிடம் இவர்கள் ஏதாவது கருத்து கேட்டார்களா? யாரிடம் இவர்கள் இந்த முடிவு பற்றி விவாதித்தார்கள்? ஆட்சியில் இருப்பதால் பல்வேறு மொழிகள் சம்பந்தப் பட்ட பிரச்சினையில் இவர்களாகவே முடிவெடுக்கும் அதிகாரம் இவர்களுக்கு உண்டா?
பல ஆயிரம் ஆண்டுகள் திட்டமிட்ட ஒன்றை இப்போது இவர்கள் அமுல் படுத்த முயல்கிறார்கள் .
சமஸ்கிருத மொழியை நாட்டின் எல்லா மொழிகளிலும் திணிப்பதில் இவர்கள் பெரு வெற்றி பெற்று விட்டார்கள்.
இன்று நாட்டில் தமிழ் வங்காளி போன்ற வெகு சில மொழிகள் தவிர ஏனைய இந்திய மொழிகள் அனைத்துமே சமஸ்கிருதம் கலப்பில்லாமல் இயங்கவே முடியாது.
தமிழ் நாட்டில் தான் இந்த முயற்சி திராவிட இயக்க வளர்ச்சியால் முறியடிக்கப் பட்டது.
திராவிட இயக்கம் இல்லாவிட்டால் மலையாள தெலுகு கன்னடமொழிகள் போல தமிழும் தனித்து இயங்க இயலா மொழியாக ஆகி இருக்கும்.
எல்லா மொழிகளிலும் சமஸ்கிருத ஆதிக்கம் பெருகி விட்டால் பின்னர் தனியாக சமஸ்கிருத மொழி ஆட்சி சுலபம் அல்லவா?
இந்த அடிப்படையில் தான் மத்திய அரசின் அதாவது ஆர் எஸ் எஸ் அமைப்பின் கல்வித் திட்ட நோக்கத்தை நாம் பார்க்க வேண்டும்.
சமஸ்கிருத ஆதிக்கத்தை எத்தனை மாநிலங்கள் எதிர்க்கும்?
சோர்ந்திருந்த திராவிட இயக்க செயல் வீரர்கள் தங்களை புத்துயிர் கொள்ள செய்திட இந்த மத்திய அரசின் அறிவிப்பு உதவும்.
வேதம் பயில வாய்ப்பு அளிக்கிறோம் என்கிறார்களே அதை படித்து பார்ப்பான் செய்யும் வேலையை செய்ய வாய்ப்பு அளிப்பார்களா? முதலில் அரசு பயிற்சி பெற்ற அர்ச்சகர்களுக்கு கோவில்களில் வேலை கொடுங்கள். சாதி ஒழிப்பு லட்சியம் என்று அரசு கொள்கை முழக்கம் செய்ய தயாரா???
எதையும் திணிக்கும் முயற்சி எப்போதும் வெற்றி பெறாது?