ஐ எஸ் அமைப்பு இஸ்லாமிய அரசை நிர்மாணிக்க இராக்கிலும் சிரியாவிலும் போரிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
அதில் அமெரிக்காவும் ரஷியாவும் இடையில் புகுந்து எண்ணெய்க்காக இரு தரப்பினரையும் காவு வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
இதில் இந்தியாவுக்கு எந்த பங்கும் இல்லை.
ஆனால் பிழைப்புக்காக தொழிலாளர்களாக சென்ற இந்தியர்களை ஐ எஸ் தீவிரவாதிகள் சென்ற 2014 ம் ஆண்டு பிணைக் கைதிகளாக பிடித்து வைத்திருந்தனர். இந்தியாவுக்கும் அவர்களுக்கும் எந்த பிரச்னையும் இல்லை என்பதால் அவர்கள் விடுவிக்கப் படுவார்கள் என எதிர் பார்க்கப் பட்ட நிலையில் நான்கு ஆண்டுகள் கழித்து அவர்கள் கொல்லப் பட்டு விட்டார்கள் என்று வெளி உறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அறிவித்தி ருக்கிறார்.
இவர்களில் பெரும்பாலானவர்கள் சீக்கியர்கள். அவர்கள் குடும்பத்தினருக்கு இந்திய அரசு தகுந்த இழப்பீடு தர வேண்டும் என்ற குரல்கள் எழுந்திருக்கி ன்றன.
இத்தனை ஆண்டுகளாக அவர்கள் உயிரோடுதான் இருக்கிறார்கள் என்று இந்திய அரசு சொல்லி வந்தது.
உறுதிப் படுத்தும் வரை அவர்கள் இறப்பை எப்படி நாங்கள் சொல்ல முடியும் என்று அமைச்சர் கூறுவது பொறுப்பில்லாத பதில்.
ஐ எஸ் தீவிரவாதிகள் எவ்வளவு கொடூரமானவர்கள் என்பதை இந்த சம்பவம் காட்டுகிறது.
அதை விட இந்திய அரசு எவ்வளவு பலவீனமான உளவுத் துறையை கொண்டிருக்கிறது என்பதையும் இந்த சம்பவம் காட்டுகிறது.