மோடி அமைச்சரவையில் எட்டு மாநிலங்களுக்கு இடம் தரப்படவில்லை.
தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா மாநிலங்களில் பாஜகவுக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. கர்நாடகம் பாஜகவுக்கு அதிக இடங்களை தந்து திராவிடம் பாஜகவை நிராகரித்தது என்று சொல்லவிடாமல் செய்துவிட்டது.
கேரளாவில் பாஜக வெல்லவில்லை என்றாலும் அதன் மாநில தலைவர் முரளிதரன் மகாராஷ்டிரா மாநில மாநிலங்களவை உறுப்பினர் ஆக இருக்கிறார் என்பதால் அவருக்கு மோடி தன் அமைச்சரவையில் இடம் தந்துவிட்டார்.
எனவே அவர் கேரளாவின் பிரதிநிதி என்பதாகத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.
தமிழகத்திற்கு இபிஎஸ் – ஒபிஎஸ் சண்டையால் இடம் கிடைக்காமல் போய்விட்டது.
நிர்மலா சீதாராமனையும் ஜெய்சங்கரையும் தமிழர்கள் என்று சில பத்திரிகைகள் எழுதுகின்றன. அவர்களே தங்களை தமிழர்கள் என்று சொல்லிக்கொண்டதில்லை. அவரகளை எப்படி தமிழ்நாட்டு பிரதிநிதிகளாக எடுத்துக்கொள்வது.?
ஆந்திராவில் ஒரு இடம் கூட கிடைக்காவிட்டாலும் யாருக்கும் மோடி இடம் தராதது ஜகன் மோகன் ரெட்டி என்ற கிறிஸ்தவர் முதல்வர் ஆனது காரணமா என்பது தெரியவில்லை.
மணிப்பூர், சிக்கிம் மிசோரம், நாகாலாந்து, மேகாலய, திரிபுரா மாநிலங்களும் புறக்கணிக்கப்பட்டுள்ளன.
குறைகளை அமைச்சரவை விரிவாக்கம் போது மோடி சரி செய்வார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
This website uses cookies.