சில நாட்களுக்கு முன்பே உ பி முதல்வர் யோகி ஆதித்யநாத் இந்திய ராணுவத்தை மோடியின் சேனை என்று பேசியிருந்தார்.
அது தொடர்பாக அவருக்கு தேர்தல் ஆணையமும் அறிவிப்பு அனுப்பி விளக்கம் கோரியிருக்கிறது.
இந்நிலையில் காசியாபாத் தொகுதி பாஜக வேட்பாளரும் முன்னாள் ராணுவ தலைவரும் மத்திய அமைச்சருமான வி கே சிங் ” இந்திய ராணுவத்தை மோடியின் சேனை என்று சொல்லுவது தவறு மட்டுமல்ல சொல்பவர்கள் நாட்டுக்கு விரோதிகள் ” என்று சொல்லியிருக்கிறார்.
இது ஆதித்ய நாத்துக்கும் சிங்குக்கும் இடையே உள்ள பிளவை காட்டுகிறதா என்பது இனிமேல்தான் தெரியும்.
” ராணுவம் அரசியலுக்கு அப்பாற்பட்டது. எந்த சார்பும் இல்லாதது. யார் எப்படி பேசினார்கள் என்பது எனக்கு தெரியாது. ஆனால் சிலர் மோடியின் பா ஜக தொண்டர்களை படையாக நினைத்து பேசியிருக்கலாம்.
ராணுவ வெற்றிகளை தன் வெற்றியாக பதிவு செய்ய நினைத்த மோடிக்கும் இது சரியான பதிலடி.
This website uses cookies.