தமிழர்களை மேலும் ஒடுக்க ராணுவ ரோந்து; கோத்தபயவின் கோர முகம்?

kothapaya-rajabaksey
kothapaya-rajabaksey

போருக்குப்பின் தமிழர்கள் வாழ்க்கை இலங்கையில் முடங்கிப் போய்விட்டது.

உரிமைக்குரல் எதையும் எழுப்பும் நிலையில் யாருமே இல்லை. அடங்கிப் போய்தான் வாழவேண்டும். சாதாரண மனித உரிமைகள் கூட அங்கே கேள்விக் குறிதான்.

இந்த நிலையில் போர்க்குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்ட கோத்தபய ராஜபக்சே அதிபராகவும் அவரது சகோதரர் மஹிந்த ராஜபக்சே பிரதமராகவும் பதவி ஏற்ற பின் நிலைமை படுமோசம்.

இரண்டே இரண்டு தமிழர் பிரதிநிதிகள். அதிலும் ஒருவர் எப்போதுமே ஆட்சியாளர்களுக்கு ஆதரவளிக்கும் மலையக தொண்டைமான் மற்றொருவர் டக்லஸ் தேவானந்தா .                              .

இந்தியாவில் எப்படி முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூட பாஜக சார்பில் தேர்ந்தெடுக்கப்படாமல் பாஜக ஆட்சி அமைத்ததோ அதேபோல் முஸ்லிம் அமைச்சர் ஒருவர் கூட இல்லாமல் சிங்கள அமைச்சரவை அமைக்கப்பட்டிருக்கிறது.

இன்னிலையில் இலங்கை முழுதும் ராணுவம் ரோந்து பணி ஆற்றும் என்று புதிய அதிபர் ஆணையிட்டிருக்கிறார். இதன் பொருள் தமிழர் வாழும் பகுதிகளில் இனி தமிழர்கள் ராணுவ கண்காணிப்பில் தான் நடமாட முடியும்.  சந்தேகப்படும் யாரையும் ராணுவம் சுட்டு வீழ்த்தும். யாரும் கேள்வி கேட்க முடியாது. ஏற்கெனெவே யாழ் பகுதியில் ராணுவ கட்டுப்பாட்டில்தான் தமிழர்கள் வாழ்ந்து வருகிறார்கள். பிறகு ஏன் இன்னும் ராணுவ ரோந்து?

தமிழர்கள் யாரும் கூடி செயல்படக் கூடாது. உரிமைக்குரல் எழுப்பக் கூடாது. கூடினால் சுட்டு வீழ்த்துவோம். இதுதான் இன்று புதிய அதிபர் விடுக்கும் செய்தி.

இதைப்பற்றியெல்லாம் கவலைப் படாமல் இந்திய அரசு புதிய அதிபருக்கு அழைப்பு விடுத்தது அவரும் இந்தியாவுக்கு வரப்போகிறார். சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்படும். பின் எதற்கு அவர் தமிழர்களைப் பற்றி கவலைப் பட வேண்டும்.?

கண்டும் காணாமலும் இருக்கும் இந்திய அரசே

உனது கண்கள் என்று திறக்கும்?!