கிறிஸ்து பிறப்பதற்கு முன் – கிறிஸ்து பிறப்பிற்கு பின் என்று
B.C. ( Before Christ ) – A.D.( Anno Domini) என்று ஆண்டுகளை கணக்கிடுவதற்கு பள்ளிப் பாடத்தில் கற்றுக் கொடுக்கப் பட்டது. அதாவது 2018 என்றால் ஏசு கிறிஸ்து பிறந்து அத்தனை ஆண்டுகள் ஆகின என்று பொருள்.
பொது ஆண்டை குறிப்பதற்கு ஏன் கிறிஸ்துவின் பிறப்பைக் குறிக்க வேண்டும் என்று பல தரப்பினர் ஆட்சேபித்துக் கொண்டுதான் இருந்தனர்.
முஸ்லிம் கள் முஹம்மது நபி மெக்காவை விட்டு மெதினாவுக்கு புறப்பட்ட நிகழ்வை குறிக்கும் வகையில் தங்கள் ஆண்டை குறியீடாக வைத்திருக்கிறார்கள். ஹிஜ்ரி ஆண்டும் முஸ்லிம் மாதங்களும் தனி.
தமிழர்கள் திருவள்ளுவர் ஆண்டை தங்கள் ஆண்டாக கொள்கிறார்கள். அதாவது தற்போதைய ஆண்டான 2018 +31 = 2049 தான் தமிழர் ஆண்டு.
யூதர்களும் கிறிஸ்தவ ஆண்டை ஏற்றுக் கொள்வதில்லை. ஏனென்றால் கிறிஸ்துவின் பிறப்பையும் அவர் ஆண்டவனின் குமாரர் என்பதையும் அவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. இத்தனைக்கும் ஏசு கிறிஸ்து யூத வம்சத்தில் பிறந்தவர்.
பல ஆண்டுகளாகவே பொது ஆண்டை கணக்கிடும் போது மத அடிப்படை இருக்கக் கூடாது என்ற கோரிக்கை எழுந்து கொண்டே இருந்தது.
இங்கிலாந்து நாட்டின்பி பி சி ஒலிபரப்பு நிறுவனம் இனி தாங்கள் ஆண்டை குறிக்க B.C.E. – C.E. ( Before Common Era- Common Era ) என்ற பதங்களையே பயன் படுத்தப் போவதாக அறிவித்தது. அதற்கும் அங்குள்ள கிறிஸ்தவ அமைப்புகள் கண்டனம் எழுப்பியது வேறு.
ஆக அந்த அமைப்புகளின்? முடிவை ஓட்டி தமிழ்நாட்டு பாடப் புத்தகங்களிலும் பொ.ஆ.மு. – பொ.மு. என்று இடம் பெற்றிருப்பது வரவேற்கத் தக்கதே.
இந்த பொது ஆண்டின் பெயர்தான் மாறுகிறதே தவிர ஆண்டை மாற்ற வில்லை.
கிறிஸ்து பிறப்பை ஓட்டி நிர்ணயிக்கப் பட்ட ஆண்டாக இருந்தாலும் அதை பொது ஆண்டாக பெயர் வைத்தால் கிறிஸ்தவர் அல்லாதோர் ஏற்றுக் கொள்வார்கள் அல்லவா?
மத அடையாளங்கள் மெல்ல மெல்ல மறையட்டும்.