ராஜஸ்த்தான் மாநில கல்வி அமைச்சர் வாசுதேவ் தேவ்னானி அரசுப் பள்ளிகளில் நான்காம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை சமஸ்கிருத மொழியை மூன்றாம் மொழியாக கற்க வேண்டியதை கட்டாயமாக்கப் போவதாகவும் இதற்காக முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியாவிடமும் மத்திய அமைச்சர் பிரக்காஷ் ஜவடேகருடனும் கலந்து பேசி விரிவான திட்டத்தை வெளியிடப் போவதாகவும் அறிவித்திருக்கிறார்.
இதுவரை மூன்றாம் மொழியாக சமஸ்கிருதம், பஞ்சாபி, குஜராத்தி , உருது , சிந்தி வங்காளி ஆகிய மொழிகள் தேர்ந்து எடுக்க முடியும் என்று இருந்தது. அதை மாற்றி சமஸ்கிருதம் மட்டுமே கட்டாயம் என்று ஒரு அரசு திணிக்க முனைவது என்ன நியாயம்?
இன்று ராஜஸ்தானில் கொண்டு வருபவர்கள் நாளை எல்லா மாநிலங்களிலும் இதை புகுத்த மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்?
ஐந்தாயிரம் சமஸ்கிருத ஆசிரியர்களுக்கு வேலை கிடைக்கும் என்பதுடன் இதே திட்டத்தை தனியார் பள்ளிகள் மீதும் திணிக்கும் திட்டமும் இருக்கிறதாம்.
நீதிமன்றங்கள் தான் தலையிட்டு இந்த அதிகார அத்துமீறலை தடுத்து நிறுத்த வேண்டும் .
This website uses cookies.