வட இந்தியாவில் சாதி அமைப்பு எவ்வளவு வேரூன்றி இருக்கிறது என்பதற்கு சான்றாக காங்கிரசின் சி.பி.ஜோஷி என்ற முன்னாள் மத்திய அமைச்சர் பேசிய பேச்சு உணர்த்தியது.
பார்ப்பனர்கள் அதிகம் உள்ள ராஜஸ்தானின் நந்த்வாரா தொகுதியில் காங்கிரசின் சி.பி.ஜோஷி வேட்பாளர். பாஜக-வை தாக்குவதாக நினைத்துக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடியையும் உமாபாரதி சாத்வி ரிதாம்பரா போன்றவர்களை விமர்சிக்க ஆரம்பித்தார்.
‘மோடி, உமா பாரதி, ரிதாம்பரா போன்றவர்கள் கீழ் சாதியை சேர்ந்தவர்கள். இவர்கள் எப்படி இந்து மதத்தை பற்றி பேசலாம். அவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது. இந்து மதம் பற்றி பேச பிராமணர்களுக்கு மட்டுமே உரிமை இருக்கிறது ‘ என்று பேசிய ஜோஷியின் பேச்சு சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.
தேர்தல் கமிஷன் நோட்டிஸ் கொடுக்கிறது. அதற்குள் ராகுல் காந்தி தலையிட்டு ஜோஷி பேசியது தவறு. கட்சிக்கு கெட்ட பெயர் வாங்கிக் கொடுக்கும் வகையில் பேசியதை ஏற்றக் கொள்ள முடியாது என்று சொன்னவுடன் ஜோஷி தனது கருத்தை வாபஸ் பெற்றார்.
அதுகூட உளப்பூர்வமாக வாபஸ் பெற்றாரா என்று சொல்ல முடியாது. ஏனென்றால் தனது கருத்து யாருடைய மனதையாவது புண் படுத்தியிருந்தால் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் என்றால் அது தவறு என்று உணர்ந்ததாகவா பொருள்?
வட இந்திய பார்ப்பனர்களின் பெரும்பலானவர்களின் கருத்து ஜோஷியின் கருத்தை ஒட்டித்தான் இருக்கிறது என்பது மட்டும் உண்மை.