அதிர்ச்சி. ஆனால் உண்மை.
பக்ரைன், ஓமன், கத்தார், குவைத், சவுதி அரேபியா, அரபு எமிரேட்ஸ் ஆகிய 6 அரபு நாடுகளில் பணி புரியும் இந்தியர்களில் கடந்த ஆறு மாதங்களில் மட்டும் சராசரியாக தினமும் 10 பேர் இறந்து வருகின்றனர் என்ற அதிர்ச்சி செய்தியை ஆர் டி ஐ என்ற தன்னார்வ அமைப்பை சேர்ந்த வெங்கடேஷ் நாயக் என்பவர் மத்திய மனித உரிமைகள் மற்றும் பொது நல அமைப்பில் புகாராக தெரிவித்துள்ளார்.
மக்களவை மற்றும் மாநிலங்கள் அவையில் தாக்கல் செய்த புள்ளி விபரப்படி 2012 ம் ஆண்டு முதல் இதுவரை அரேபிய நாடுகளில் 24570 இந்தியர்கள் இறந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மருத்துவர் ராமதாஸ் இது பற்றி ஒரு அறிக்கை வெளியுட்டுள்ளார். வளைகுடா நாடுகளின் மொத்த மக்கள் தொகையான 5.49 கோடியில் 25,000 பேர் இறந்தது சாதாரணமானதல்ல.
கத்தார் அரசு வெளியுட்டுள்ள அறிக்கையில் 80% இயற்கை மரணங்கள் 14 % விபத்துக்கள் 6% தற்கொலைகள் என்றும் குறிப்பிடுவதை அப்படியே ஏற்றுக்கொள்ளமுடியாது.
இந்த ஆறு நாடுகளில் இருந்தும் சுமார் 15 லட்சம் கோடிக்கும் மேலாக இந்தியாவுக்கு வருமானம் வந்திருக்கிறது என்பதற்காகவாவது அவர்களில் பாதுகாப்பை இந்திய அரசு உறுதி செய்ய வேண்டாமா?
மருத்துவர் ராமதாஸ் கூறியதுபோல் வெளிநாடு வாழ் தமிழர் நலனுக்காக ஒரு தனி அமைச்சகத்தை ஏற்படுத்தி யாக வேண்டும்.
நல்ல உடல் நலத்துடன் தான் ஒருவர் வெளிநாடு பயணம் மேற் கொள்ள முடியும். அவர்கள் திடீர் என்று இயற்கை மரணம் எய்தினர் என்று எப்படி ஏற்றுகொள்ள முடியும்?.
கேரளம் தமிழ்நாடு தெலுங்கானா, ஆந்திரா ஆகிய மாநிலங்களை சேர்ந்தவர்கள் தான் அதிகம் பேர் வளைகுடா நாடுகளில் வேலை பார்க்கிறார்கள்.
மிகவும் கவலை அளிக்கக் கூடிய தகவல்கள் இவை. இவற்றை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது.
அரபு நாடுகளில் வேலை வாய்ப்பு தேடும் இந்தியர்களுக்கு இது ஒரு எச்சரிக்கை மணி!!!