அனைத்து தரப்பினரும் அர்ச்சராக லாம் என்று சட்டம் கொண்டு வந்தது கலைஞர்.
அதற்கென ஒரு அர்ச்சகர் பயிற்சி பள்ளி தொடங்கி தலித் , பிற்பட்டோர் உட்பட பலரை அர்ச்சகர் பணி புரிவதற்கென தயார் படுத்தினார்கள். பயிற்சி பெற்று பணியில் சேர தயாராக இருந்த நிலையில் சில பார்ப்பனர்கள் தூண்டுதலில் உச்சநீதி மன்றம் தலையிட்டு பணியில் சேர விடாமல் தடை செய்து இருக்கிறது.
அதை உச்சநீதி மன்றம் வரை கொண்டு சென்று தடை பெற்றவர்கள் நோக்கம் என்னவென்றால் பிற வகுப்பினர் அர்ச்சகர் பணி செய்ய விடக் கூடாது என்பதுதான்.
அவர்களை பொறுத்த வரை அர்ச்சகர் பணி என்பது இறைப்பணி மட்டுமல்ல. அது ஒரு வாழ்வாதாரம் . அதில் பிற சமூகத்தவர் தங்களோடு பணி புரிவதை இழுக்காக நினைக்கிறார்கள்.
இன்று கேரளாவில் நியமிக்கப்பட்ட 62 அர்ச்சகர்களில் 6 பேர் தலித்துகள் 36 பேர் இதர வகுப்பினர்.
எல்லா மாநிலங்களிலும் கொண்டு வரப்பட வேண்டிய அவசர சீர்திருத்தம் இது.
தமிழகத்தில் பயிற்சி பெற்ற அர்ச்சகர்கள் பல சாதிகளை சேர்ந்தவர்கள் வேலைக்காக காத்திருக்கிறார்கள்.
தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில்மனு தாக்கல் செய்து தடையை உடைக்க வேண்டும்.
அது மட்டுமல்ல இறைவன் சந்நிதியில் தமிழ் கோலோச்ச வேண்டும். அர்ச்சனைகள் தமிழில் நடக்க வேண்டும்.
தமிழ் அர்ச்சனை தயாரிக்கிறோம் என்று சொல்லி தப்பு தப்பாக தயாரித்து சதி செய்வார்கள்.
எல்லாவற்றையும் தமிழர்கள் முறியடிக்க வேண்டும்.
சமஸ்க்ரிதம் வேண்டும் என்போர் கேட்டு பாடச் சொல்லலாம். இங்கு சமஸ்க்ரிததிலும் அர்ச்சனை செய்யப்படும் என்று போர்டு வேண்டுமானால் போட்டுக் கொள்ளட்டும்.
நமது கவலை எல்லாம் இதற்கும் யாராவது ஒரு பார்ப்பான் உச்சநீதி மன்றம் சென்று இதற்கும் தடை வாங்காதிருக்க வேண்டும்??
This website uses cookies.