பாரதி புத்தகாலயம் ‘நாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல்’ என்ற தலைப்பில் ரூபாய் 15/- விலையில் இந்து என் ராம் தலைமையில் ஒரு புத்தகத்தை வெளியிட இருந்தபோது தேர்தல் ஆணைய அதிகாரிகள் திடீர் என்று அந்த புத்தகங்களை பறிமுதல் செய்தனர்.
அது உடனடியாக பிரச்னை ஆனது. தேர்தல் சமயத்தில் அதை வெளியிட கூடாது என்று தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது.
இந்நிலையில் தமிழக தேர்தல் தலைமை அதிகாரி சத்யபிரதா சாஹு பறிமுதல் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிடவில்லை என்றார்.
எதிர்ப்பு கிளம்பியுடன் பறிமுதல் செய்த புத்தகங்களை மாலையில் திருப்பி கொடுத்து இருக்கிறார்கள்.
சரி. தவறாகவும் தகுந்த ஆணை எதுவும் இல்லாமலும் பறிமுதல் செய்த அதிகாரிக்கு என்ன தண்டனை?
யார் சொல்லி அவர் இந்த நடவடிக்கை எடுத்தார்?
கெட்ட பெயர் ஏற்படும் என்றவுடன் வாலை சுருட்டிக் கொண்டது தேர்தல் ஆணையம் என்றுதானே பொருள்?
பாஜக – அதிமுக வுடன் கூட்டு சேர்ந்து கொண்டதா தேர்தல் ஆணையம்?
இல்லையென்றால் அனுமதி இன்றி தவறான நடவடிக்கை எடுத்த அதிகாரி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கட்டும்??!! அல்லது தேவையில்லாமல் வானில் துப்பாக்கியால் சுட்டு அதிர்ச்சி அளித்த தேர்தல் அதிகாரியை மாற்றியது போல் இவரையும் மாற்றட்டும்.
குறிப்பு; இந்த பதிவு வெளிவந்த அடுத்த நாளே புத்தகங்களை பறிமுதல் செய்த தேர்தல் அதிகாரியை ஆணையம் இட மாற்றம் செய்து விட்டது. வாழ்த்துக்கள்.