சமீப காலத்தில் எந்த ஆளுநரும் இப்படி மோசமாக நடந்திருக்க முடியாது.
பெரும்பான்மை காட்டிய காங்கிரஸ் – ம ஜ த கூட்டணியை ஆட்சியமைக்க அழைக்காமல் பெரும்பான்மை இல்லாத எடியூரப்பாவை முதல்வர் ஆக்கியது- உச்ச நீதிமன்றம் தலையிட்ட பின்பும் மூத்த உறுப்பினரை சபாநாயகர் ஆக்காமல் பா ஜ க உறுப்பினரை சபாநாயகர் ஆக்கியது என்று வெறுக்கத் தக்க முறையில் பார பட்சமாக நடந்துகொண்டார் வாஜ்பாய் வாலா.
கடைசியில் உச்சநீதிமன்றம் விதித்த ஒரு நாள் கெடுவில் ஆட்களை விலைக்கு வாங்க முடியாமலும் , சபை நடவடிக்கைகள் நேரடி ஒளிபரப்பில் இருந்ததால் முறைகேடுகளில் ஈடுபட முடியாமலும் வாக்கெடுப்பில் தோல்வியை சந்திக்க விரும்பாமல் ராஜினாமா முடிவுக்கு வந்தார் எடியூரப்பா.
உச்சநீதி மன்றம் தக்க நேரத்தில் தலையிட்டிருக்காவிட்டால் கர்நாடகத்தில் ஜனநாயகம் பா ஜ க கைகளில் சிக்கி மாண்டிருக்கும் .
தர்ம நியாயத்தை பற்றி பேச இனி பா ஜ க வுக்கு என்ன தகுதி மிச்சம் இருக்கிறது.
மோடி வெல்ல முடியாதவர் என்ற பிம்பமும் சாய்க்கப் பட்டிருக்கிறது.
ஆளுநர் என்பவர் தேவையா என்பதை பற்றியும் அவர்களை எப்படி கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்பதை பற்றியும் வரையறை செய்ய நேரம் வந்து விட்டது.
பிரச்னையை தீர்க்க வேண்டியவர்கள் பிரச்னையை உருவாக்கி விடுகிறார்கள்.
தென்னாட்டில் பா ஜ க தலை தூக்க முடியாது என்று மீண்டும் நிருபிக்கப் பட்டிருக்கிறது.
This website uses cookies.