பாரத ஸ்டேட் வங்கி ஊழியர் தேர்வில் இட ஒதுக்கீட்டில் மோசடி?!

modi
modi

பாரத ஸ்டேட் வங்கியின் எழுத்தர் பணிக்கு தேர்வுகள் பலகட்டங்களாக தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

அதில் தேறுபவர்களுக்கு என குறைந்த மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்படுகின்றன.

அதில் எஸ்சி, ஓபிசி, பொது பிரிவினருக்கு 100 மார்க்குகளுக்கு 61.25ம் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்சாதி வகுப்பினருக்கு 28.5ம் குறைந்தபட்ச மதிப்பெண்கள் ஆக நிர்ணயிக்கப் பட்டிருக்கின்றன.

இப்போது தெரிகிறதா ஏன் பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்குஉயர் சாதியினருக்கு பத்து சத இட ஒதுக்கீட்டை பாஜக அரசு தீவிரமாக முன்னெடுத்தது என்று ?

எஸ்சி வகுப்பினர் ஓபிசி வகுப்பினர் பொதுபிரிவினர் தேர்வாக 61.25 மார்க் எடுக்க வேண்டும் என்பதும் உயர்சாதி வகுப்பினர் மட்டும் 28.5 மார்க் எடுத்தால் போதும் என்றால் அவர்கள் அனைவருமே தேர்வாகிவிடுவார்கள் என்பதுதானே பொருள்?

இதில் பாதிக்கப்படுபவர்கள் பிற்பட்டோரும் மற்றவர்களும்தான்.

ஆக பொருளாதார அடிப்படையில் உயர் சாதியினருக்கு இட ஒதுக்கீடு என்பது சமூக நீதி கோட்பாட்டின் அடித்தளத்தையே நொறுக்கிவிடும் என்பது கண்கூடு .

பாஜக அரசு செய்யும் காரியங்கள் சமூகத்தில் பதட்டத்தை உருவாக்கி அமைதியின்மைக்கு வழிகோலி வருகிறது.

இவர்கள் தங்கள் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதுதான் எல்லாருடைய எதிர்பார்ப்பும்?!