கர்நாடகத்திலும் மகாராஷ்டிரத்திலும் இடது சாரி நாத்திக எழுத்தாளர்கள் திட்டமிடப் பட்டு கொல்லப்பட்டு வருகிறார்கள்.
எம் எம் கல்பர்கி . நரேந்திர தபோல்கர். கோவிந்த் பன்சாரே என்று பட்டியல் நீளுகிறது. அந்தப் பட்டியலில் கர்நாடகாவின் கெளரி லங்கேஷ் சேர்ந்திருக்கிறார். இரவு வீடு திரும்பும்போது வாசலில் வைத்து சுட்டக் கொன்றிருக்கிறார்கள் . 55 வயதான கெளரி தனியே வாழ்ந்திருக்கிறார்.
எல்லாரும் நாத்திகர்கள். இடது சாரி சிந்தனையாளர்கள். குறிப்பாக பாசிச இந்துத்துவ சக்திகளுக்கு எதிராக கருத்து உருவாக்கம் வலிவு பெற போராடிக்கொண்டு இருந்தவர்கள்.
எல்லாருமே 7.65 எம் எம் பிஸ்டலை கொண்டுதான் சுடப் பட்டு இறந்திருக்கிறார்கள்.
இதை கர்நாடக காவல் துறை விரைவில் துப்புத் துலக்கி விடை கண்டு பிடிக்கும் என்று நம்புகிறோம் .
அவர் நடத்தி வந்த கெளரி லங்கேஷ் பத்திரிகை பாசிச எதிர்ப்பு, இனவாத எதிர்ப்பு மற்றும் நக்சல் ஆதரவு என்று இடது சாரி சிந்தனை மரபுடனேயே நடத்தப் பட்டு வந்திருக்கிறது.
மாவோயிஸ்டு களை சரண் அடைய செய்து மாற்று பாதை காட்டும் பணியையும் அவர் செய்து வந்திருக்கிறார். ஏன் அவர்களே கூட இதை செய்திருக்க கூடாது என்றும் சிலர் சந்தேகங்களை எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
துப்புக் கொடுப்பவர்களுக்கு பத்து லட்சம் ரூபாய் சன்மானம் அறிவித்திருக்கிறது மாநில அரசு. முதல் முதலாக ஒரு பத்திரிகை ஆசிரியருக்கு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய அரசு முன்வந்திருக்கிறது. காங்கிரஸ் அரசு கண்டு பிடித்து விடும் என்று நம்பிக்கை இருக்கிறது.
பா ஜ க வை எதிர்ப்பவர்கள் என்ன ஆவார்கள் என்பதை காட்டி மிரட்டும் முயற்சியாக ஏன் இருக்க கூடாது என்பதுதான் பெரும்பான்மை கருத்து.
ஏனென்றால் நரேந்திர மோடியை இன்னும் ஆராண்டுகளுக்கு யாராலும் அசைக்க முடியாது என்ற கருத்து பொதுவாக மக்கள் மத்தியில் பரப்பப் பட்டு வருகிறது.
காரணம் மாற்றாக தன்னை காட்டிக்கொண்டு களமிறங்க வேண்டிய காங்கிரஸ் கோஷ்டிப் பூசல்களால் தவித்துப் போய் நிற்பதுதான்.
இந்து மதத்துக்குள் சாதிய அமைப்பை எதிர்ப்பவர்கள் இப்படித்தான் கொல்லப் படுகிறார்கள்.
லிங்காயத் சமூகத்தில் பிறந்த கெளரி சாதி அமைப்பை எதிர்ப்பது அந்த சமூகத்துக்கே கூட ஒப்புதல் இருக்காது. ஏனென்றால் அவர்கள் நாங்கள் இந்துக்கள் அல்ல. தனியான அடையாளம் உள்ளவர்கள். எங்களை லிங்காயதுக்கள் என்ற அடையாள த்தோடுதான் அழைக்க வேண்டும் என்பதே அவர்களில் குறிப்பிட்ட பிரிவினரின் கோரிக்கை.
உண்மை வெளிப்படும் போதுதான் மக்களுக்கு விழிப்புணர்வு பிறக்கும் என்பதால் மர்ம முடிச்சை காவல் துறை அவிழ்க்கும் நாளை மக்கள் ஆவலோடு எதிர் பார்திருக்கிறார் கள்.
This website uses cookies.