ராஜஸ்தான் அரசு பிரதமர் மோடி கலந்து கொள்ளும் பொதுக் கூட்டத்திற்கு அரசு செலவில் ரூ 7 கோடி செலவிட்டிருப்பது எல்லாரையும் முகம் சுளிக்க வைத்திருக்கிறது.
5600 பேருந்துகள் மூன்று லட்சம் பேரை ஜெய்ப்பூர் அழைத்து வருகின்றன.
பல்வேறு நலத் திட்டங்கள் மூலம் சுமார் இரண்டரை லட்சம் பேர் பயன் அடைந்திருப்பதாக வசுந்தரா ராஜே சிந்தியா அரசு அறிவித்திருக்கிறது.
ஒரு மக்களின் அரசு இப்படி விரயம் செய்வதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.
தேர்தல் வர இருக்கும் நிலையில் இப்படி அரசு பணத்தில் மக்களை மயக்க திட்டமிடுவது ஒருவகையில் ஊழல் நடவடிக்கை என்றே கூறலாம்.
சமீபத்தில் எந்த அரசும் இப்படி அரசு செலவில் கட்சியை பலப் படுத்திக் கொள்ள முயன்றது இல்லை.
மோடியின் பிம்பம் சரியும் நிலையில் இந்த ஆடம்பாம் மேலும் அதை மேலும் வீழ்ச்சி அடையவே செய்யும்.