மம்தா பானர்ஜி அறிவித்த ரூபாய் 28 கோடி துர்கா பூஜை மானியத்துக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு ?

mamtha-banerji
mamtha-banerji

மேற்கு வங்க முதல் அமைச்சர் மம்தா பானர்ஜி மத சார்பற்றவர் என்று சொல்லிக் கொள்பவர்.

அதனால் பாஜக-வை மிகவும் தீவிரமாக விமர்சிப்பவர்.

காங்கிரசுக்கும் எதிரி. முப்பது ஆண்டு காலம் பதவியில் இருந்த இடது கம்யுனிஸ்டுகளுக்கும் எதிரி.

ஆனால் ஆட்சியில் நீடிக்க வேண்டும் என்றால் மாநிலத்தில் இருக்கும் 28 % முஸ்லிம்களை பகைத்துக் கொள்ளக் கூடாது என்ற கொள்கையில் உறுதியாக இருப்பவர்.

அதனால்தான் அவரது அரசு 2012-லேயே முஸ்லிம்களை திருப்திப்படுத்தும் விதமாக இமாம்களுக்கும் முவெசின்களுக்கும் மாதாந்திர உதவித்துகையாக மாநில அரசுக்கு ஆண்டுக்கு  128 கோடி ரூபாய் செலவில் ஒரு திட்டத்தை அறிவித்தார்.

அதை உயர் நீதிமன்றம் செல்லாது என்று அறிவித்த நிலையிலும் அந்த துகையை வக்பு போர்டுக்கு வேறு வகையில் சென்றடையும் வகையில் ஏற்பாடு செய்தார் மம்தா பானர்ஜி.

இப்போது அந்த மானியத்தை வக்பு போர்டு கொடுத்தாலும் உண்மையில் அது மாநில அரசின் பணம்தான்.

இப்போது இந்துக்களை வசீகரிக்கும் எண்ணத்தில் மாநிலம் முழுதும் இருக்கும் சுமார்  28000   துர்கா பூஜை கமிட்டிகளுக்கு தலா ரூபாய் 10000 வீதம் 28 கோடி ரூபாய் மானியம் அறிவித்தார். அதற்கு சமுதாய வளர்ச்சி திட்டம் என்றும் பெயர் சூட்டினார்.

முன்பு முஸ்லிம்களுக்கு மாத ஊதியம் அளித்ததை சட்ட விரோதம் என்று அறிவித்த உயர்நீதிமன்றம்   முதலில் இடைக்கால தடை விதித்து விட்டு இப்போது அதை விலக்கி கொண்டு பணம் சம்பத்தப் பட்ட முடிவுகளை சட்டப் பேரவை யே முடிவு செய்யட்டும் என்று தீர்ப்பளித்து மம்தாவிற்கு நிம்மதி அளித்திருக்கிறது.

மேற்கு வங்கத்தை பொறுத்த வரை அது கம்யுனிஸ்ட்களாக இருந்தாலும் சரி காங்கிரஸாக இருதாலும் சரி பாஜக வாக இருந்தாலும் சரி திரிணமூல் ஆக இருந்தாலும் சரி உச்ச பட்ச பதவிகளில் பார்ப்பனர்கள் தான் இருக்கிறார்கள்.

மம்தாவின் பலம் அவர் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது. ரத்த சொந்தங்களை மேலே கொண்டு வராமல் இருப்பது.  தனக்கென சொத்து  சேர்க்காமல் இருப்பது.    மத உணர்வுகளுக்கு அப்பாற்பட்டவராக காட்டிகொள்வதுதான்.

ஆனால் எல்லா கட்சிகளிலும் பார்ப்பனர்களே தலைமை இடத்தில் அமர்ந்து  ஆட்சி செய்வது எப்படி. ?

அதுதான் வங்கம். மற்றவர்களை  ஒன்று சேர்க்க  அங்கு இயக்கம் இல்லை.

இடது கம்யுனிஸ்ட் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி தான் ஒரு பிராமணர் என்பதில் பெருமை கொள்வதாக சொன்னாரே?   கேள்வி கேட்க முடியாத தலைவராக ஜோதி பாசு கொலோச்சினாரே 28 ஆண்டுகள்?

எந்த சமுதாய சீர்திருத்தத்தை இவர்கள் அமுல்படுத்தி இருக்கிறார்கள்.?

எப்படியோ மம்தாவின் இந்த சமரசம் அவருக்கு பாராளுமன்ற தேர்தலில் வெற்றியை  தேடி தருகிறதா என்று  பார்ப்போம்?