அசாம் மாநிலத்தை சேர்ந்த ஹிமா தாஸ், இருபது வயதுக்கு உட்பட்டவர்களுக்கான பின்லாந்தில் நடந்த ஐ ஏ ஏ எப் உலக கோப்பை 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 51.46 வினாடியில் கடந்து வென்று தங்கப் பதக்கம் வென்றார்.
அகில உலக ஓட்டப் பந்தய போட்டி ஒன்றில் இந்தியா பெற்ற முதல் தங்கபதக்கம் இது.
மகிழ்ச்சிக்குரிய விடயம் ஹிமா தாஸ் தங்கம் வென்றவுடன் இந்திய கொடியுடன் இந்திய தேசிய கீதம் இசைக்கப் பட்ட பொது உணர்ச்சி வசப்பட்டு அழுதார்.
பிரதமர் மோடியே இதைப்பார்த்து விட்டு பாராட்டினார்.
ஹிமாவின் உணர்ச்சி தன்னை நெகிழ வைத்து விட்டதாக எழுதி இருக்கிறார். பிரதமர் பாராட்டினால் மட்டும் போதாது. அரசு செலவில் சிறப்பு பயிற்சி , மனதளவில் தெம்பாக இருக்க தேவையான பொருளாதார உதவி எல்லாம் செய்து தர வேண்டும்.
மற்ற இந்தியர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா?
கூகுளில் சென்று ஹிமா தாசின் சாதி என்ன என்று கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
சாதி எவ்வளவு ஆழமாக இந்திய சமுகத்தில் ஊடுருவி இருக்கிறது என்பதற்கு இது சான்று.
இதேபோல்தான் முன்பு பி வி சிந்து வெள்ளிப்பதக்கம் வென்ற வுடன் அவரது சாதி அடையாளம் கேட்டு கூகுளில் விசாரித்தார்கள்.
இந்திய அரசு ஹிமா தாசுக்கு மிகப் பெரிய அங்கீகாரம் கொடுக்க வேண்டும்.
அடுத்த ஒலிம்பிக் போட்டி வரை அவருக்கு சில சலுகைகளை மத்திய அரசு அறிவித் திருக்கிறது. நிச்சயம் இது போதாது.
ஏனோ தானோ வென்று சில சலுகைகளை மட்டும் தந்தால்
அவர் ஏதோ ஒரு பிற்பட்ட சாதியை சேர்ந்தவர் என்று ஊகித்துக் கொள்ளலாம்.