இந்திய அரசியல்

சிபிஎஸ்இ- ன் மொழி வெறி முடிவுகளுக்கு எப்படி முடிவு கட்டுவது?

Share

நீட் தேர்வு நடத்தும் போது சி பி எஸ் இ கடைப் பிடிக்கும் நடைமுறைகள் மாநில மொழி மாணவர்களை அச்சுறுத்தும் வகையில் இருப்பது குறித்து கண்டனக் குரல்கள் எழுந்தபோதும் அது திருந்திய பாடில்லை.

சமீபத்தில் மத்திய ஆசிரியர் தகுதி தேர்வை தேசிய அளவில் தமிழ் ஆங்கிலம் தெலுங்கு உள்பட இருபது மொழிகளில் எழுதும் வசதியை,  ஏதோ ஒரு நீதிமன்றம் நான்கு மாதங்களில் நடத்தி முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டதால் , 17  பிராந்திய மொழிகளை நீக்கி விட்டு இந்தி ஆங்கிலம் சமஸ்க்ரிதம் ஆகிய மொழிகளில் மட்டும் எழுத சி பி எஸ் இ உத்தரவிட்டது.

நாடெங்கும் பெருத்த எதிர்ப்பு எழுந்த சூழலில் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தலையிட்டு எப்போதும் போல் தமிழ் உள்பட எல்லா மொழிகளிலும் தேர்வை எழுத உத்தரவிட்டுள்ளதாக விளக்கம் அளித்திருக்கிறார்.

எல்லாம் சரி.   இந்த முக்கிய முடிவை எடுக்கும் முன்பு அமைச்சரவையின் ஒப்புதலை பெற்று சி பி எஸ் இ அறிவிக்காதது ஏன்?

இதேபோல் தான் தோன்றித் தனமாக சி பி எஸ் இ எடுக்கும் முடிவுகள் நாடெங்கும் சிக்கல்களை உருவாக்கும் என்பது அவர்களுக்கு தெரியாதா?

இப்படி தவறான நடவடிக்கை எடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்தால்தான் மீண்டும் இந்த தவறை செய்ய மாட்டார்கள்.

இல்லையென்றால் இதற்கும் மத்திய அரசு உடந்தை என்றுதான் பொருள் கொள்ளப்படும்.

இவர்கள் மொழி வெறித் தாக்குதல் களை நிறுத்த மாட்டார்கள்.  இப்போதைக்கு பின் வாங்கியிருக்கிறார்கள்.  மீண்டும் மீண்டும் தாக்குதல்களை தொடர்வார்கள் என்பதே வெகுமக்களின் சந்தேகம்.

போக்குவது ஆட்சியாளர்களின் கடமை.

This website uses cookies.